பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : ரூ.4 விலை குறையுமா?

Updated : ஜூன் 08, 2021 | Added : ஜூன் 08, 2021 | கருத்துகள் (73)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், தலைவர், மாவட்ட தொழில் வர்த்தக சங்கம், ராமநாதபுரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா ஊரடங்கு காரணமாக பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்துள்ளது; அதனால் அதன் விற்பனையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆனால், அவற்றின் விலை மட்டும் உயர்ந்துவருகிறது. பொதுத்துறை

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், தலைவர், மாவட்ட தொழில் வர்த்தக சங்கம், ராமநாதபுரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா ஊரடங்கு காரணமாக பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்துள்ளது; அதனால் அதன் விற்பனையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆனால், அவற்றின் விலை மட்டும் உயர்ந்துவருகிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. 1 லி., பெட்ரோல் விலை,தமிழகத்தில் 100 ரூபாயை நெருங்கிவிட்டது. நம் நாட்டில் உள்ளது போல பெட்ரோல், டீசலின் விலை, மற்ற நாடுகளில் இல்லை; அங்கு குறைவாகவே உள்ளது.



latest tamil news



நம் நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில், மூன்றில் ஒரு பங்கு பூமி வளம் மூலம் கிடைக்கிறது. இப்பணியை, ஓ.என்.ஜி.சி., என்ற எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மேலும், நாட்டில் எரிபொருள் கிடைப்பதற்கு சாத்தியக்கூறு உள்ள இடங்களை கண்டறிந்து, புதிய எண்ணெய் கிணறுகளை அமைத்து வருகிறது. பற்றாக்குறையை சமாளிக்க இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் பீப்பாய், சர்வதேச சந்தையில் விலை மலிவாக கிடைக்கிறது. ஆனாலும், மத்திய அரசின் அளவுக்கு அதிகமான வரி விதிப்பு காரணமாக, பெட்ரோல், டீசலின் விலை உச்சத்தில் உள்ளது.


latest tamil news



இதன் நீட்சியாக, லாரி வாடகை உயர்கிறது; அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்கிறது... பெட்ரோல், டீசலின் விலை உயர்வு, கடைசியில் மக்கள் தலையில் விழுகிறது. 'தி.மு.க.,ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை, லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்போம்' என, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். தற்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், அதை செய்வார் என நம்புகிறோம்.

Advertisement




வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
08-ஜூன்-202122:50:34 IST Report Abuse
g.s,rajan பொது மக்களேஇந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உத்தரவுக்கு எதிராக மிக மிகக் கடுமையான போராட்டம் நடத்துங்களேன் அப்பத்தான் இதுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-ஜூன்-202119:33:51 IST Report Abuse
Pugazh V 1. அனைத்து எண்ணெய் நிறுவனங்களும், தனியார் நிறுவனங்கள் உட்பட, , "பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம்" - Minister of Petroleum and Natural Gas" - MOPNG யின் கீழ் இயங்குகின்றன. 2. பெட்ரோலிய உற்பன்னங்கள் விலைகளை இந்த அமைச்சகம் தான் தீர்மானிக்கும். ரிலையன்ஸ் எண்ணெய் நிறுவன உற்பன்னங்கள் விலைகளைக் கூட அம்பானி நிர்ணயம் செய்ய இயலாது. (அப்படி சுதந்திரம் இருந்தால், அம்பானி ஐம்பது ரூபாய்க்கு விற்பார்). 3. பெட்ரோல் டீசல் வரிவிகிதங்களை மேற்சொன்ன அமைச்சகம் தான் முடிவு செய்யும். 4. மாநில அரசின் விகிதம் மத்திய அரசின் வரிவிகிதத்தின் ஒரு பங்கு தான். 5. எனவே, மாநில அரசுகள் தங்களது வரிவிகிதத்தைக் குறைக்கும் அதிகாரம் இல்லை. 6. அப்படியே மாநில அரசு 2% குறைத்தால், எல்லா மாநில அரசுகளும் இதை ஏற்க வேண்டும். 7. அப்படி.ஏற்றுக்கொண்டாலும், அது மத்திய அரசின் விகிதத்தில் 3.8% சதவீதம் குறையும். சட்டம் இப்படி இருக்கிறது என்பதே நிஜம்.
Rate this:
Ram Ram - கொங்கு நாடு,இந்தியா
08-ஜூன்-202123:33:06 IST Report Abuse
Ram Ramஅரேபிய பெட்ரோல் விலையை இந்திய அமைச்சகம் நிர்ணயம் செய்கிறதா ? சிதம்பரம் போன்று மாத சம்பளக்காரர்களை மட்டும் குறி வைத்து வரி பிடுங்காமல் , அனைவருக்கும் பொதுவாக பெட்ரோல் வரி அமைந்துள்ளது . தனி நபர் வருமான வரி நீக்கப்பட்டு பெட்ரோல் விலை உயர்த்தப்பட வேண்டும்...
Rate this:
Ram Ram - கொங்கு நாடு,இந்தியா
08-ஜூன்-202123:37:43 IST Report Abuse
Ram Ramஇலவசங்கனால் வேண்டும் . இலவச பஸ் பயணம் , மாதம் ஆயிரம் எல்லாம் வேண்டும் .ஆனால் வரி கட்ட கூடாது வருமானமே இல்லாமல் செலவு செய்ய வேண்டும். வாரி மன்னரின் வாரிசு நிதி அமைச்சர் படித்தவராம் . அவருக்கு மேஜிக் தெரியுமாம்...
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
08-ஜூன்-202118:23:10 IST Report Abuse
Mirthika Sathiamoorthi என் கருத்தை காணம்?
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-ஜூன்-202101:30:50 IST Report Abuse
தமிழவேல் கட்சி மாறனும்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X