விலங்குகளுக்கான ரஷ்யாவின் கார்னிவாக் கோவ் கோவிட் தடுப்பூசி; இறக்குமதி செய்ய கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விலங்குகளுக்கான ரஷ்யாவின் 'கார்னிவாக் கோவ்' கோவிட் தடுப்பூசி; இறக்குமதி செய்ய கோரிக்கை

Updated : ஜூன் 08, 2021 | Added : ஜூன் 08, 2021 | கருத்துகள் (2)
Share
மதுரை: தமிழகத்தில் மனிதர்களை தொடர்ந்து சென்னை வண்டலுார் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கும் கோவிட் தாக்கியதால் ரஷ்யாவின் விலங்குகளுக்கான 'கார்னிவாக் கோவ்' தடுப்பூசியை மத்திய, மாநில அரசுகள் இறக்குமதி செய்து யானை உள்ளிட்ட வளர்ப்பு விலங்குகளுக்கு செலுத்த தமிழ்நாடு வளர்ப்பு யானை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கோவிட் தொற்றின் முதல் அலையில்
CarnivacCov, CovidVaccine, Animals, Russia, Tamilnadu, தமிழகம், கார்னிவாக் கோவ், கோவிட், கொரோனா, தடுப்பூசி, விலங்குகள், ரஷ்யா

மதுரை: தமிழகத்தில் மனிதர்களை தொடர்ந்து சென்னை வண்டலுார் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கும் கோவிட் தாக்கியதால் ரஷ்யாவின் விலங்குகளுக்கான 'கார்னிவாக் கோவ்' தடுப்பூசியை மத்திய, மாநில அரசுகள் இறக்குமதி செய்து யானை உள்ளிட்ட வளர்ப்பு விலங்குகளுக்கு செலுத்த தமிழ்நாடு வளர்ப்பு யானை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோவிட் தொற்றின் முதல் அலையில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது மனிதர்களிடம் இருந்து தான் அவைகளுக்கு பரவும் என நிபுணர்கள் தெரிவித்தனர். அதன்படி அன்று விலங்குகளை பெரியளவில் கோவிட் தாக்கவில்லை. ஆனால், பல நாடுகளில் விலங்குகளுக்கான கோவிட் தடுப்பூசி கண்டறியும் பணி நடந்தது. சில மாதங்களுக்கு முன் ரஷ்யா விலங்குகளுக்கான 'கார்னிவாக் கோவ்' கோவிட் தடுப்பூசியை கண்டுபிடித்தது. அதை நரிகள், நாய்கள், பூனைகளுக்கு செலுத்தியதில் பலன் கிடைத்ததால் ரஷ்யாவில் விலங்குகளுக்கு செலுத்தப்படுகிறது.


latest tamil news



ஜெர்மனி, கிரீஸ், போலாந்து, ஆஸ்திரியா, கஜகஸ்தான், தாஜிகிஸ்தான், மலேசியா, தாய்லாந்து, தென் கொரியா, ஈரான், அர்ஜென்டினா தடுப்பூசியை பெற ஆர்வம் காட்டியுள்ளது. இதனால் முதல் கட்டமாக 17,000 தடுப்பூசிகள் உற்பத்தி செய்யும் பணி நடக்கிறது. சங்க தலைவர் மதுரை ரங்கன் கூறியதாவது; வளர்ப்பு, கோயில் யானைகள், செல்ல பிராணிகளை பாதுகாக்க வேண்டும். முதல் அலையில் நான் வளர்க்கும் லட்சுமி, குஷ்மா யானைகளுக்கு கபசுர குடிநீர் கொடுப்பது, கால்நடை டாக்டர்களை வரவழைத்து உடல் பரிசோதனை செய்வது என பல வகையில் பாதுகாத்தேன்.

இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விலங்குகளுக்கு கோவிட் தாக்க வாய்ப்பு அதிகம். மனிதர்களுக்கு தாக்கம் குறைந்த நிலையில் விலங்குகள் மூலம் தாக்கம் அதிகரிக்காமல் தடுக்க வேண்டும். விலங்குகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ரஷ்யா 'கார்னிவாக் கோவ்' தடுப்பூசியை மத்திய, மாநில அரசுகள் இறக்குமதி செய்து முகாம் மூலம் வளர்ப்பு, கோயில், செல்ல பிராணிகளுக்கு செலுத்த வேண்டும், என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X