படித்ததும் சிரிக்கத் தோன்றுகிறது. எதற்காக சொன்னீர்கள் என்றுதான் தெரியவில்லை..| Dinamalar

படித்ததும் சிரிக்கத் தோன்றுகிறது. எதற்காக சொன்னீர்கள் என்றுதான் தெரியவில்லை..

Updated : ஜூன் 08, 2021 | Added : ஜூன் 08, 2021 | கருத்துகள் (37)
Share
நாய், கடிக்க வேகமாக வந்தது. அதை பார்த்து, மனைவியை துாக்கி வைத்துக் கொண்டார் கணவர். அருகில் வந்த நாய், கடிக்காமல் சென்று விட்டது. கீழே இறங்கிய மனைவி, 'நாயை அடிக்க கல், கட்டையை தான் எடுப்பர்; நீங்கள் என்னை துாக்கி அடிக்கப் பார்த்தீர்களே...' என்று கோபித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், கணவனை, மனைவி தான் தவறாக நன்கு அறிந்திருப்பாள்.- முன்னாள் மத்திய அமைச்சர்
படித்ததும் சிரிக்கத் தோன்றுகிறது. எதற்காக சொன்னீர்கள் என்றுதான் தெரியவில்லை..

நாய், கடிக்க வேகமாக வந்தது. அதை பார்த்து, மனைவியை துாக்கி வைத்துக் கொண்டார் கணவர். அருகில் வந்த நாய், கடிக்காமல் சென்று விட்டது. கீழே இறங்கிய மனைவி, 'நாயை அடிக்க கல், கட்டையை தான் எடுப்பர்; நீங்கள் என்னை துாக்கி அடிக்கப் பார்த்தீர்களே...' என்று கோபித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், கணவனை, மனைவி தான் தவறாக நன்கு அறிந்திருப்பாள்.
- முன்னாள் மத்திய அமைச்சர் சத்ருகன் சின்கா


'படித்ததும் சிரிக்கத் தோன்றுகிறது; பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எதற்காக சொன்னீர்கள் என்பது தான் தெரியவில்லை...' எனக் கூறத் துாண்டும் வகையில், முன்னாள் மத்திய அமைச்சர் சத்ருகன் சின்கா அறிக்கை.கொரோனா தொற்றால் இறந்தவர்களின் இறுதி சடங்கில் அதிக நபர்கள் பங்கேற்பதால், கொரோனா பரவுகிறது. எனவே நோய் தொற்றால் இறந்தவர்களின் உடல்களை, இனி நகராட்சி மூலம் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர்


'உபதேசம் ஊருக்கு மட்டும் தானா; அமைச்சர்களுக்கு கிடையாதா; 50, 100 பேருடன் வலம் வருகின்றனரே...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி.இயந்திரத்தை குதிரை திறனில் குறிப்பிடுகிறோம் என்பதற்காக குதிரையும், இயந்திரமும் ஒன்றா. குதிரை தானாக செயல்படும்; குதிரை திறனில் குறிக்கப்படும் இயந்திரம் தானாக செயல்பட முடியாது. அதுபோன்றதே இன்றைய மத்திய அரசு, ஒன்றிய அரசு சர்ச்சை.
- பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா


latest tamil news
'புதிய குதிரை கொஞ்ச காலத்திற்கு மிரண்டு, முரண்டு பிடிக்கத் தான் செய்யும்; அதன் பின் வழிக்கு வரும்...' எனக் கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா அறிக்கை.விமானத்திலும், தரையிலும் பல ஆயிரம் கி.மீ., பயணம் செய்துள்ளேன். 2,000 முறை விமான பயணம் செய்திருப்பேன்; 60 நாடுகளுக்கு, ஆறு கண்டங்களுக்கும் சென்றுள்ளேன். நம் நாட்டில் உள்ள கோவா சென்றதில்லை.
- தமிழக நிதியமைச்சர் தியாகராஜன்


'கோவாவுக்கு போகாமலேயே அந்த மாநில அமைச்சருடன், 'ஆன்லைனில்' சண்டை போட்டு விட்டீர்களே சார்...' என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் அறிக்கை.தமிழகத்தில் தற்போது, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்து, பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தால், 'வக்கற்ற அடிமை தமிழக அரசு, மத்திய பா.ஜ., அரசு வழியில் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்துவிட்டது' என்று, தி.மு.க., அறிக்கை வந்திருக்கும்.
- தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி


'அப்போது பேசியது வேற வாய்; இப்போது பேசுவது வேற வாய்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X