பொது செய்தி

தமிழ்நாடு

உலகளாவிய தடுப்பூசி ஒப்பந்தம் ரத்து ஏன்

Updated : ஜூன் 08, 2021 | Added : ஜூன் 08, 2021
Share
Advertisement
சென்னை: இந்தியாவில் மூன்று நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் உலகளாவிய 'டெண்டருக்குஎந்த நிறுவனமும் தடுப்பூசி அளிக்க முன்வரவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என அரசு ஆலோசித்து வருகிறது.உலகளவில் கொரோனா தொற்று பரவ துவங்கியதில் இருந்து, தடுப்பூசிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாகின.மத்திய அரசு அனுமதி பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பின் 'பாரத்
 உலகளாவிய தடுப்பூசி ஒப்பந்தம் ரத்து ஏன்

சென்னை: இந்தியாவில் மூன்று நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் உலகளாவிய 'டெண்டருக்குஎந்த நிறுவனமும் தடுப்பூசி அளிக்க முன்வரவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என அரசு ஆலோசித்து வருகிறது.
உலகளவில் கொரோனா தொற்று பரவ துவங்கியதில் இருந்து, தடுப்பூசிகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாகின.


மத்திய அரசு அனுமதி


பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பின் 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின் 'கோவாக்சின்' தடுப்பூசிக்கும் சீரம் நிறுவனத்தின் 'கோவிஷீல்டு' தடுப்பூசிக்கும் மத்தியஅரசு அனுமதி வழங்கியது.இதன்பின் நாடு முழுதும் தடுப்பூசி போடும் பணி ஜன. 16ம் தேதி துவங்கியது. இதற்கான தடுப்பூசிகளை மத்திய அரசே நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறது.45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசியை மாநிலங்களுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்கியது.ஆனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசியை மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து வாங்கிக் கொள்ள மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது.

அதன்படி கோவாக்சின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை தமிழக அரசும் 80.46 கோடி ரூபாய் செலவில் இந்நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்துள்ளது.இங்கு நாள் ஒன்றுக்கு 2 லட்சம் பேர் தடுப்பூசி போட்டு கொள்ள முன்வருகின்றனர்.எனவே தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஐந்து கோடி குப்பி தடுப்பூசிகள் கொள்முதல் செய்யதமிழக அரசுமே மாதம் 15ம் தேதி உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது.

ஒப்பந்தப்புள்ளியில் கூறியிருப்பதாவது:இந்திய ரூபாய் அமெரிக்கா டாலர்யூரோ செலாவணிகளில் ஒப்பந்தம் கோரலாம். தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நேரடியாக இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் வர்த்தகம் செய்யும் பெரு நிறுவனங்கள் போன்றவைவிண்ணப்பிக்கலாம்.


முன்வைப்பு தொகை


இதற்கு உற்பத்தி அங்கீகார சான்று நிறுவன செயல்பாடு குறித்த மதிப்பீடு ஒப்பந்தம் தொடர்பான உறுதிமொழி உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட சான்றுகளை அளிக்க வேண்டும்.மேலும் 2 கோடி ரூபாய் முன்வைப்பு தொகை செலுத்த வேண்டும். ஒப்பந்தம் கோர இம்மாதம் 5ம் தேதி காலை 11:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.அதன்பின் 12:00 மணிக்கு நிறுவனங்கள் இறுதி செய்யப்படும். இறுதி செய்யப்பட்ட நிறுவனத்திற்கு 30 சதவீத முன்வைப்பு தொகை வழங்கப்படும்.அதன்பின் 90 நாட்களுக்குள் அனைத்து தடுப்பூசிகளையும் வழங்க வேண்டும். அதற்கான பணம் மற்றும் முன்வைப்பு தொகை இரண்டும் சேர்த்து வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டது.

இந்தியாவை பொறுத்தவரை கோவாக்சின் கோவிஷீல்டுரஷ்யாவின் 'ஸ்புட்னிக்' தடுப்பூசிகளுக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த மூன்று தடுப்பூசிகளை மட்டுமே இந்தியமக்களுக்கு செலுத்த முடியும்.இந்தமூன்று நிறுவனங்களும் மத்திய அரசிடம் நேரடியாக விற்பனை செய்து வருவதால் தமிழகஅரசின் டெண்டருக்குவிண்ணப்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.


நேரடி கொள்முதல்


இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை. இதனால், அடிக்கடி தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே உலகளவிலான டெண்டர் வாயிலாக நேரடியாக கொள்முதல் செய்ய திட்டமிட்டோம். அதற்கு, எந்நிறுவனமும் விண்ணப்பிக்கவில்லை.

தற்போது மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வரும் தடுப்பூசிகளுக்காக காத்திருக்க வேணடிய நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வருடன் ஆலோசித்து அடுத்து என்ன செய்வது என்பது முடிவெடுத்துவிரைவில் அறிவிக்கப்படும். மிண்டும் ஒப்பந்தம் கோருவதா என்பது, விரைவில் அறிவிக்கப்படும். தற்போதைய சூழலில் கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் எனமத்திய அரசிடம் தொடர்ந்துவலியுறுத்துவோம்.இவ்வாறு அவர்கள்கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X