மோடி மீது முழு நம்பிக்கை உள்ளது: உத்தவ் தாக்கரே

Updated : ஜூன் 08, 2021 | Added : ஜூன் 08, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி: மராத்தா இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மோடி மீது நம்பிக்கை உள்ளதாக மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்து உள்ளார்.மஹாராஷ்டிராவில், 2018ல் பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக இருந்தபோது, மராத்தா சமூக மக்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்புகளில் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச
Maharashtra, CM,s PM Modi, Maratha quota,, GST compensation

புதுடில்லி: மராத்தா இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மோடி மீது நம்பிக்கை உள்ளதாக மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்து உள்ளார்.

மஹாராஷ்டிராவில், 2018ல் பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக இருந்தபோது, மராத்தா சமூக மக்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்புகளில் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.


latest tamil news


இந்நிலையில் மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அவருடன் துணை முதல்வர் அஜித் பவார், முன்னாள் முதல்வர் அசோக் சவான் உள்ளிட்டோர் உடன் சென்றனர். இந்த சந்திப்பின் போது, மராத்தா மற்றும் ஓபிசி இட ஒதுக்கீடு, புயல் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதன் பின்னர் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:ஜிஎஸ்டி, மராத்தா இட ஒதுக்கீடு குறித்து ஆலோசனை செய்தோம். மராத்தா இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது குறித்து பிரதமரிடம் விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடி மீது நம்பிக்கை உள்ளது. பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Engineer - California,யூ.எஸ்.ஏ
09-ஜூன்-202102:31:35 IST Report Abuse
Engineer ளகரங்கள் கை மாறினால் எல்லா நம்பிக்கையும் வந்து விடும். நமது அரசியல் வாதிகள் உள்நாட்டு கார் பயன்படுத்தலாமே........TATA இருக்கும் போது TOYOTA எதற்கு?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
08-ஜூன்-202120:17:28 IST Report Abuse
Ramesh Sargam இந்த உத்தவ் எப்பொழுதும் மோடியை குறை கூறி கொண்டிருப்பார். இப்ப என்ன திடீர் என்று ஐஸ் வைக்கிறார், மோடி மீது முழு நம்பிக்கை உண்டு என்று??? "சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்று சொல்வது இதுதானா...?
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
08-ஜூன்-202117:52:27 IST Report Abuse
Loganathaiyyan என்னாது குட்டிக்கரணம் இவ்வளவு பெரிசாவா???எங்கேயோ ஒதைக்குதே???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X