இருவாட்சி பறவைகளின் காதலன் ஷாம்

Updated : ஜூன் 08, 2021 | Added : ஜூன் 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பறவைகளில் இருவாட்சி பறவை தனிரகமானதுஇரை தேடுவது முதல் இரவில் இளைப்பாறுவது வரை ஜோடி சேர்ந்துவிட்ட ஆண், பெண் பறவைகள் இணைந்தே இருக்கின்றனஎந்த சூழ்நிலையிலும் தனது இணையை ஆண் பறவை பிரிவதே இல்லை இன்னும் சொல்லப்போனால் உள்ளங்கையில் வைத்து தாங்குவது போலவே தனது இணையை ஆண் பறவை தாங்குகிறது.நான் உனக்கு இரை தேடி தருகிறேன் நீ என் கூட இருந்தால் போதும் என்று காதலியை தன் பார்வை
 இருவாட்சி பறவைகளின் காதலன் ஷாம்

பறவைகளில் இருவாட்சி பறவை தனிரகமானது

இரை தேடுவது முதல் இரவில் இளைப்பாறுவது வரை ஜோடி சேர்ந்துவிட்ட ஆண், பெண் பறவைகள் இணைந்தே இருக்கின்றன

எந்த சூழ்நிலையிலும் தனது இணையை ஆண் பறவை பிரிவதே இல்லை இன்னும் சொல்லப்போனால் உள்ளங்கையில் வைத்து தாங்குவது போலவே தனது இணையை ஆண் பறவை தாங்குகிறது.

நான் உனக்கு இரை தேடி தருகிறேன் நீ என் கூட இருந்தால் போதும் என்று காதலியை தன் பார்வை படும் இடத்தில் வைத்துக் கொண்டு பறந்து பறந்து இரைதேடி வந்து ஊட்டும்.

கருவுற்றதும் பெண் பறவையின் தியாகம் மிகப் பெரியது. உயரமான மரத்தில் இயற்கையாக அமையப்பெற்ற பொந்தை கூடாகப் பாவித்து உள்ளே போய் உட்கார்ந்து கொள்ளும்,இறக்கை இல்லாவிட்டால் ஒரு ஆபத்து அவசரத்திற்கு கூட பறக்க முடியாது என்பது தெரிந்தும் தனது இறக்கைகள் அனைத்தையும் உதிர்த்து மெத்தை போல உருவாக்கி அதன் மீது ஒன்றில் இருந்து மூன்று முட்டைகள் வரை போட்டு அடைகாக்க ஆரம்பித்துவிடும்.

ஆண் பறவை தனது இணைக்கோ, முட்டைக்கோ ஆபத்து எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக பொந்தை மண் மரக்கூழ் கொண்டு அடைத்துவிடும் ஒரே ஒரு சிறிய ஒட்டையை மட்டும் போட்டு இருக்கும் அந்த ஒட்டை வழியாகவே இணைக்கு தேவையான உணவை கொண்டு வந்து ஊட்டும்.


latest tamil newsகிட்டத்தட்ட ஏழு வாரங்கள் இந்த காட்சி தொடரும் ஏழு வாரங்களுக்கு பிறகு ஆண் பறவை தான் அடைத்த பொந்தை உடைத்து தாய்ப்பறவையையும் குஞ்சுகளையும் வெளியே கொண்டு வரும்.

குஞ்சு பொரித்தாலும் அவைகள் பறக்கப் பழகும் வரை தாய்ப்பறவை பொந்துக்குள்தான் இருக்கும் அப்போதும் ஆண் பறவைதான் அவைகளுக்கான உணவை கொண்டு வந்து கொடுக்கும்.

இந்த காலகட்டத்தில் ஆண் பறவை மனிதர்களால் வேட்டையாடப்பட்டோ அல்லது வேறு ஏதாவது காரணத்தினாலோ இறந்து போனால் தாய்ப்பறவையும் அதன் குஞ்சுகளும் உணவு கிடைக்காமல் இறந்து போக நேரிடும்.


latest tamil news


Advertisement

இப்படி ஒரு பாசமான பறவைக்கூட்டத்தை வேறு எங்கும் பார்க்கமுடியாது, அது மட்டுமல்ல மரங்களில் கிடைக்கும் பழங்களை விரும்பிச் சாப்பிடும் இந்தப் பறவைகள் வெளியேற்றும் கொட்டைகள் மிகவும் வீரியம் கொண்டவை, விழுந்த உடனேயே முளைக்கக்கூடிய தன்மை மிக்கவை காடுகளில் உயரமான மரங்கள் இருப்பதற்கும் வளர்வதற்கும் இவை முக்கிய காரணியாகும்.


latest tamil news


ஹார்ன்பில் என்று சொல்லப்படும் மலை மரங்களில்தான் இந்தப் பறவைகள் பெரும்பாலும் இருக்கும் ஆகவே இந்தப் பறவையின் பெயரே ஆங்கிலத்தின் ஹார்ன்பில் என்று அழைக்கப்படுகிறது.இதன் முக்கியத்துவம் கருதி கேரளாவில் இந்தப் பறவை தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news


இயற்கைக்கும் மலை மரங்களின் வளர்ச்சிக்கும் பெரும் உறுதுணையாக இருக்கும் இந்த இருவாட்சி பறவை இனங்கள் அழிந்து வருகிறது என்பதுதான் கவலைக்குரிய விஷயம் காடுகளில் உயரமான மரங்கள் வெட்டப்படுவதுதான் இதற்கு முக்கிய காரணம்.


latest tamil news


தலையில் விசேஷ கொண்டையுடன் நீண்டு வளைந்த அலகுடன் அடர்த்தியான வண்ணத்தில் விமானம் பறப்பது போல சத்தமிட்டு பறக்கும் இந்தப் பறவை உலகம் முழுவதும் 54 வகைகளில் இருந்தாலும் இந்தியாவில் 9 வகைகள்தான் உள்ளன அதிலும் தென்னகத்தில் 4 வகைகள்தான் உள்ளது.


latest tamil news


இந்தப் பறவைகளைப் பற்றியும் அதன் குணாதிசயம் பற்றியும் கேள்விப்பட்ட பொள்ளாச்சியில் போட்டோகிராபர் ஷாம் மேற்கு தொடர்ச்சி மலையில் இந்தப் பறவைகளை படம் எடுக்க பல முறை முயற்சித்து கடைசியாக தனது முயற்சியில் வெற்றி கண்டுள்ளார்.


latest tamil news


ஐ.டி.,ஊழியரான ஷாம் சிறு வயது முதலே புகைப்படம் எடுத்துக் கொண்டு வருகிறார் இவருக்கு காட்டுயிர்களை படம் எடுப்பது என்பது விருப்பமான விஷயமாகும் ஆந்தை, சிங்கவால் குரங்கு, மான் போன்ற வன உயிரினங்களை வித்தியாசமாக படம் எடுத்திருந்தாலும் இருவாட்சி பறவையை படம் எடுத்ததுதான் தனக்கு மன நிறைவைத் தருவதாக கூறுகிறார்.

இவர் எடுத்த இருவாட்சி படங்கள் சர்வதேச அளவில் வெளிவரும் ஊடகம் முதல் இந்தியாவில் பிரபலமாக உள்ள வனம் தொடர்பான ஊடகங்கள் வரையிலும் பிரசுரமாகி இவருக்கு பாராட்டுக்களை குவித்து வருகிறது நீங்களும் பாராட்ட எண்ணினால் அழைக்க வேண்டிய எண்:86670 08784.
-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. S. Ramamurthy - Chennai,இந்தியா
09-ஜூன்-202107:32:46 IST Report Abuse
P. S. Ramamurthy Excellent Article - as usual by Sri L. Murugaraj. Is a gift to Dinamalar. GOD BLESS him to continue.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X