தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தாமல் தளர்வுகளை அறிவிப்பது ஆபத்து: உலக சுகாதார அமைப்பு

Updated : ஜூன் 08, 2021 | Added : ஜூன் 08, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
ஜெனீவா: கோவிட் தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தாமல் தளர்வுகளை அமல்படுத்துவது ஆபத்து என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.உலகம் முழுவதும் கோவிட் பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. பல நாடுகளும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்திட
WHO, Relaxation, CovidVaccine, உலக சுகாதார அமைப்பு, தடுப்பூசி, தளர்வுகள்

ஜெனீவா: கோவிட் தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தாமல் தளர்வுகளை அமல்படுத்துவது ஆபத்து என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் கோவிட் பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. பல நாடுகளும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்திட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், கோவிட் பாதிப்பில் இருந்து தற்காத்திட மக்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதேநேரத்தில் பெருவாரியான மக்கள் தடுப்பூசி செலுத்திவிட்டதால், அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன. அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.


latest tamil news


இந்நிலையில், தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தாமல் தளர்வுகளை அமல்படுத்துவது ஆபத்து என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் டெட்ராஸ் அதானம் கூறுகையில், ‛நாங்கள் கோவிட் பரவலை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இன்னும் பல நாடுகள் ஆபத்தில்தான் உள்ளன. கோவிட் தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தாமல் தளர்வுகளை அமல்படுத்துவது ஆபத்தில்தான் முடியும். வரும் செப்டம்பர் மாதத்துக்குள் ஒவ்வொரு நாடும் தங்கள் மக்கள் தொகையில் 10 சதவீத மக்களுக்கு தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும். 2021 இறுதியில் இந்த எண்ணிக்கை 30 சதவீதமாக இருக்க வேண்டும்,' எனக் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
koradurairaj - tirupur,இந்தியா
09-ஜூன்-202108:09:56 IST Report Abuse
koradurairaj எத்தனை லட்சம் கோடி செலவு செய்தாலும் போகும் உயிரை தடுத்து நிறுத்த முடியும் என்று உலக மருத்துவ முறைகள் நிரூபிக்கட்டும். பிறகு இவர்கள் கூறும் பூச்சாண்டி கதைகளை எல்லாம் உண்மை என்று கேட்கலாம். விஞ்ஞான வில்லன்கள் கூறுவதை சற்று உற்று நோக்கிப்பார்தால் புரியும் இவர்களின் வில்லத்தனம் என்னவென்று கொரோனா தொற்று அலை வீசுவதை முன்கூட்டியே கணிக்கிறார்கலாம் அதுவும் முதல் அலையில் முதியவர்களை தாக்கும் இரண்டாம் அலையில் இளைஞர்களை தாக்கும் என்று.... இனியும் மூன்றாம் அலை வருகிறதாம் அது குறிப்பாக குழந்தைகளை தாக்கும் என அச்சுறுத்துவது ஏதோ ஜோதிடம் சொல்வது போல் உள்ளது... விழித்திடு.. விழித்திரு..
Rate this:
Cancel
Nithya - Chennai,இந்தியா
09-ஜூன்-202106:50:53 IST Report Abuse
Nithya Unakku solla enna yokkiyadhai irukku. Chinavin mouthpiece ivan
Rate this:
Cancel
b.sriram -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜூன்-202106:03:33 IST Report Abuse
b.sriram WHO has been favouring china in this episode. it is time that Chinas communist idology to be dismantled and democracy may prosper.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X