அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசல், புரசல், அரசியல்....: மகனுக்கு மத்திய மந்திரி பதவி -அழுத்தம் தரும் பன்னீர்செல்வம்!

Updated : ஜூன் 08, 2021 | Added : ஜூன் 08, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை: மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்ய, பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்... கூட்டணி கட்சிகளும், மத்திய அமைச்சரவையில் இடம்பெற பிரதமர் விரும்புகிறாராம்... அமைச்சரவையில, அ.தி.மு.க.,வுக்கும் இடம் தர பிரதமர் தயாரா இருக்கிற தகவல் தெரிஞ்சதும், தன் மகனை மத்திய அமைச்சரவையில இடம் பெற வைக்க, ஓ.பன்னீர்செல்வம் அழுத்தம் கொடுக்கிறாராம்... இந்த தகவல் பழனிசாமியின்
அரசல்_புரசல்_அரசியல், மகன், மத்திய மந்திரி,அழுத்தம், ஓ.பி.எஸ்., ஸ்டாலின், தேமுதிக, விஜயகாந்த், திமுக,

சென்னை: மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்ய, பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்... கூட்டணி கட்சிகளும், மத்திய அமைச்சரவையில் இடம்பெற பிரதமர் விரும்புகிறாராம்...

அமைச்சரவையில, அ.தி.மு.க.,வுக்கும் இடம் தர பிரதமர் தயாரா இருக்கிற தகவல் தெரிஞ்சதும், தன் மகனை மத்திய அமைச்சரவையில இடம் பெற வைக்க, ஓ.பன்னீர்செல்வம் அழுத்தம் கொடுக்கிறாராம்... இந்த தகவல் பழனிசாமியின் கவனத்துக்கும் போயிருக்காம்... என்ன நடக்குதுன்னு பார்ப்போம்னு, தேனி மாவட்ட, அ.தி.மு.க.,வினர் ஆர்வமா காத்திருக்காங்க...!


ரேஷன் பருப்பு ஊழல் விவகாரத்தில் சிக்கும் மூவர் கூட்டணி!


ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விற்பனைக்காக, கடந்த ஆட்சியில் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்ததில், ஏகப்பட்ட ஊழல் நடந்துள்ளதாம்... அதாவது, ஒரு கிலோ துவரம் பருப்பை, 143.50 ரூபாய் என, இருபதாயிரம் டன் துவரம் பருப்பை, வாங்க தனியார் நிறுவனத்தோட ஒப்பந்தம் போடப்பட்டதாம்...
‛‛இப்ப, அந்த டெண்டரை ரத்து செய்து, புது டெண்டர் விட்டாங்க... அதே நிறுவனம், இப்போ, கிலோ, 87 ரூபாய்க்கு கொடுக்க முன் வந்திருக்காம்... இதுலயே ஊழல் வெளிச்சத்துக்கு வந்ததால, அப்போதைய உணவுத் துறை அமைச்சர், டி.என்.சி.எஸ்.சி., - எம்.டி.,யாக இருந்த பெண் அதிகாரி, தனியார் நிறுவனம் உள்ளிட்ட, மூவர் கூட்டணி மேல நடவடிக்கை பாயப் போகுதாம்...!


‛தே.மு.தி.க.,வை ‛டிஸ்டர்ப்' பண்ணாதீங்க...!'


சட்டசபைத் தேர்தல்ல, அ.ம.மு.க.,வுடன் கூட்டணி வைத்து, போட்டியிட்ட, தே.மு.தி.க., படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியில இருந்து பலர் வெளியேறி வருகின்றனர்...பெரும்பாலானோர், தி.மு.க., பக்கம் சாய விருப்பப்பட்டு, தி.மு.க., மாவட்ட செயலர்களிடம் தங்களுடைய விருப்பத்தை தெரிவிச்சிருக்காங்க...


latest tamil news


இந்த நிலையில தான், ‛தே.மு.தி.க.,வினரை கட்சியில் சேர்த்து, விஜயகாந்த் மனம் நோகும்படி நடந்துக் கொள்ள வேண்டாம்'னு, தி.மு.க., மாவட்ட செயலர்களுக்கு ஸ்டாலினிடமிருந்து உத்தரவு போயிருக்காம்...!

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
09-ஜூன்-202109:23:10 IST Report Abuse
Ellamman எல்லாம் பீசப்பி ஆட்டுவித்து போல ஆடினால் மகனுக்கு பதவி நிச்சயம். அடிமை அண்ணா தி மு க துண்டானால் தான் தாமரை மலர முடியும் என்றால் ஒரு ஆள்காட்டி தேவை தானே?
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
09-ஜூன்-202107:30:59 IST Report Abuse
Elango என்ன செய்து விட்டார் என்று மந்திரி பதவி ?? பொன்னாரை மேல்சபையில் போட்டு தரலாம், இல்லை வாசன்... ஓபிஎஸ்/ இபிஎஸ்.இருவரும் துரோகிகள்
Rate this:
Cancel
Nithya - Chennai,இந்தியா
09-ஜூன்-202106:49:07 IST Report Abuse
Nithya Extra luggage summakka paithiyama enna
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X