பொது செய்தி

இந்தியா

தடுப்பூசியை வீணடித்தால் ஒதுக்கீடு குறையும்: வழிமுறை வெளியீடு

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 08, 2021 | கருத்துகள் (8+ 2)
Share
Advertisement
புதுடில்லி :கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க உள்ளது.இதையடுத்து, மாநிலங்களுக்கான ஒதுக்கீடு எந்தெந்த அடிப்படையில் செய்யப்படும் என்ற வழிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 'அதிகளவில் தடுப்பூசியை வீணடித்த மாநிலங்களுக்கான ஒதுக்கீடு குறையும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பூசி களை மத்திய அரசே
வீணடித்த மாநிலங்கள், ஒதுக்கீடு,குறையும் ,தடுப்பூசி ,வழிமுறை

புதுடில்லி :கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க உள்ளது.

இதையடுத்து, மாநிலங்களுக்கான ஒதுக்கீடு எந்தெந்த அடிப்படையில் செய்யப்படும் என்ற வழிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 'அதிகளவில் தடுப்பூசியை வீணடித்த மாநிலங்களுக்கான ஒதுக்கீடு குறையும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பூசி களை மத்திய அரசே மாநிலங்களுக்கு வழங்கி வந்தது. ஆனால், 'தடுப்பூசி வினியோகத்தை பரவலாக்க வேண்டும்'என மாநிலங்கள்நடைமுறை சிக்கல்இதையடுத்து, தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து மாநிலங்கள் நேரடியாக வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால், விலை கொடுத்து வாங்க வேண்டியதுடன் பல்வேறு நடைமுறை சிக்கல்களை மாநிலங்கள் சந்தித்தன.இதையடுத்து தடுப்பூசி கொள்முதல் குறித்த புதிய கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். இதன்படி, நாட்டில் தயாராகும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும்.

மீதமுள்ள 25 சதவீதத்தை தனியார் மருத்துவமனைகள் விலைக்கு வாங்கி கொள்ளலாம். அதனுடன், அதிகபட்சம் 150 ரூபாய் சேவை கட்டணத்தை வசூலிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
மாநிலங்களுக்கு இலவசம்வரும், 21ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளதாவது:

* இதுவரை உள்நாட்டு தயாரிப்பில் 50 சதவீதத்தை மத்திய அரசும், ஒரு 'டோஸ்' மருந்தை 150 ரூபாய் செலவில் வாங்கி, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வந்தது

* மாநில அரசுகளும், தனியார் மருத்துவமனைகளும், தலா 25 சதவீதத்தை, நிறுவனங்களிடம் இருந்து விலைக்கு வாங்க அனுமதிக்கப்பட்டன

* தற்போது மாநில அரசுகளின் பங்கான 25 சதவீதத்தையும் சேர்த்து, மத்திய அரசே 75 சதவீத மருந்துகளை வாங்கி, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும். மாநில அரசுகள் எந்த செலவையும் செய்யத் தேவையில்லை

* தனியார் மருத்துவமனைகள், 25 சதவீத மருந்துகளை பெறுவது தொடரும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துடன், சேவை கட்டணமாக, அதிகபட்சம் 150 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும்


தனி கவனம்* தடுப்பூசிகளுக்கான விலையை, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிக்கும். தற்போதைக்கு, 'கோவாக்சின்' 1,200 ரூபாய்க்கும், 'கோவிஷீல்டு' 600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது

* மருந்து தயாரிப்பு நிறுவனங்களை ஊக்குவிக்கவே, தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவீத ஒதுக்கீடு செய்யப்படுகிறது

* வரும், 21ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும்

* மக்கள் தொகை, நோய்த் தொற்றின் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதிக ஒதுக்கீடு செய்யப்படும்

* தடுப்பூசி வழங்கும் பணியில் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ள மாநிலங்களுக்கு, ஒதுக்கீட்டில் தனி கவனம் செலுத்தப்படும்

* தடுப்பூசியை அதிக அளவில் வீணடித்த மாநிலங்களுக்கான ஒதுக்கீடு குறையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


44 கோடி 'டோஸ் ஆர்டர்''அனைத்து மாநிலங்களுக்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்படும்' என, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். இந்நிலையில், 44 கோடி 'கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின்' தடுப்பூசி 'டோஸ்'களை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப்
இந்தியா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் நேற்று, மத்திய அரசு 'ஆர்டர்' செய்துள்ளது. 'இந்த டோஸ்கள், வரும் ஆகஸ்டு முதல் டிசம்பருக்குள் தயாரித்து வினியோகிக்கப்பட்டு விடும்' என, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


ரூ.50 ஆயிரம் கோடி செலவுமத்திய நிதி அமைச்சக உயரதிகாரிகள் கூறியதாவது:தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்வதற்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். அதற்கு தேவையான நிதி உள்ளது. அதற்காக கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடு தேவையில்லை. இருப்பினும், பார்லி.,யின் அடுத்த கூட்டத்
தொடரில் அது குறித்து யோசிக்கப்படும். மொத்தமாக தடுப்பூசிக்கும், தீபாவளி வரை ரேஷன் பொருட்களை வழங்குவதற்கும் 1 லட்சத்து, 45 ஆயிரம் கோடி செலவாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (8+ 2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
09-ஜூன்-202123:36:29 IST Report Abuse
unmaitamil அடுத்த மாதம் ரேஷன் பொருள்கள் கிடைக்க வேண்டும் என்றால் 45, வயதுக்கு க்கு மேல் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருந்தாள் மட்டுமே கொடுக்கப்படும் என்றும், அடுத்த இரண்டு மாதத்தில் குடும்பத்தில் 18, வயதுக்கு மேல் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு தெரிவிக்க வேண்டும். பொறுப்புடன் இலவசமாக அரசு அரிசி தரும்போது, அரசு சொல்வதை மக்கள் நம்பி, அரசுக்கு கட்டுப்பட வேண்டும். இதுதான் வழி.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-ஜூன்-202123:00:20 IST Report Abuse
Pugazh V அண்டை நாடுகளுக்கு தடுப்பூசி கடத்தலா?? இப்படி எழுதியவர் என்ன லூசா ? இந்தியா மாதிரி வேறு எந்த நாடும் தடுப்பூசி இல்லாமல்.தவிக்க வில்லை. அவனவன் அவனோட.மக்கள் தொகையின் இரண்டு மடங்கு டோஸ்களுக்கு எப்பவோ ஆர்டர் கொடுத்து வாங்கியாச்சு. நாம இப்ப தான் 44 கோடி டோஸ் ஆர்டர் பண்ணியிருக்கோம். நமக்கு தேவை 260 கோடி டோஸ். இதெல்லாம் யோசிக்கறதில்லை. செய்திகளை முழுசா படிக்கறதில்ல. எப்ப பார்த்தாலும் எல்லாவற்றிலும் எதிர்மறை அரசியல் எழுதுவதே வேலை. இதை scinicism என்பார்கள். மாறுவது கொஞ்சம் கஷ்டம் தான். பலமாதங்களுக்கு ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
09-ஜூன்-202121:51:43 IST Report Abuse
RajanRajan மாநிலங்களுக்கு தடுப்பூசி இலவசம்னு சொல்லி வீணடித்தால் விநியோகம் குறைக்கபடும்னு பொறுப்பா செயலாற்ற மாநில அரசுக்கு மத்திய அரசு கடிவாளம் போட்டுவிட்டது. தடுப்பூசி பற்றாகுறைக்கு மாநில அரசு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது.. டூல்கிட், & உலகளாவிய டிரக் மாபியாக்களுக்கும் சேர்த்து தேசிய உலகளாவிய ஆப்பு அடிச்சுட்டாங்கடோய். மத்திய அரசுக்கு ஒரு சல்யூட் ....NOW INTERNATIONAL DRUG MAPHIYS & THEIR LOCAL FLUTES ARE CORNERED BY MODI SARKAR. JAI HINTH
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X