பொது செய்தி

இந்தியா

தேர்தல் சீர்திருத்த பரிந்துரை: அமைச்சருக்கு கமிஷனர் கடிதம்

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 08, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி :பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளிக்கும் நபருக்கு இரண்டு ஆண்டு சிறை உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்த பரிந்துரைகள் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி சட்ட அமைச்சருக்கு, தலைமை தேர்தல் கமிஷனர் கடிதம் எழுதி உள்ளார்.தேர்தல் சீர்திருத்தங்கள் சார்ந்த பல பரிந்துரைகளை, மத்திய அரசிடம் தலைமை தேர்தல் கமிஷன் முன்வைத்து வருகிறது. இதில் பல பரிந்துரைகள்
தேர்தல் சீர்திருத்தம், அமைச்சர், கமிஷனர் கடிதம்

புதுடில்லி :பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளிக்கும் நபருக்கு இரண்டு ஆண்டு சிறை உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்த பரிந்துரைகள் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி சட்ட அமைச்சருக்கு, தலைமை தேர்தல் கமிஷனர் கடிதம் எழுதி உள்ளார்.தேர்தல் சீர்திருத்தங்கள் சார்ந்த பல பரிந்துரைகளை, மத்திய அரசிடம் தலைமை தேர்தல் கமிஷன் முன்வைத்து வருகிறது. இதில் பல பரிந்துரைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.


நடவடிக்கை



இது தொடர்பாக, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாதுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா, சமீபத்தில் கடிதம் எழுதினார். அதில், நிலுவையில் உள்ள தேர்தல் சீர்திருத்த பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சுஷில் சந்திரா நேற்று கூறியதாவது:மத்திய சட்ட அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், தேர்தல் சீர்திருத்த பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினேன். சட்ட அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை அளிக்கும் நபருக்கு, தற்போது வரை ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்படுகிறது. இதனால், அவர்களை தகுதி நீக்கம் செய்ய முடியாமல் உள்ளது.எனவே அவர்களுக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கும் பரிந்துரை, சட்ட அமைச்சகத்திடம் வைக்கப்பட்டுள்ளது. அது அமலானால், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாது.


அவசியம்



இதேபோல், தேர்தல் பிரசாரம் முடிந்து தேர்தல் நடக்கும் நாள் வரை, செய்தித் தாள்களில், அரசியல் விளம்பரங்களை வெளியிட தடை விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுஉள்ளது. இந்த பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்றால், மக்கள் பிரதிநிதித்துவம் சட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராம.ராசு - கரூர்,இந்தியா
09-ஜூன்-202122:06:23 IST Report Abuse
ராம.ராசு தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் வெறும் அறிவிப்பாக உள்ளதுபோலவே உள்ளது. சீர்திருத்தம் என்று சொல்லுவது என்பதெல்லாம் வெறும் கண் துடைப்போ என்று தோன்றுகிறது. தேர்தல் விதிகளை மீறியவர்கள் மீது மிகப் பெரிய அளவில் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக தேர்தலை தள்ளிவைக்கும் ஆணையம் அதற்க்கு காரணமானவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கண்டிப்பாக ஆதாரங்களை வைத்துதான் தேர்தலை வைத்திருக்கவேண்டும். அப்படியென்றால் அப்படிப்பட்டவர்கள் தேரத்லில் நிற்பதற்கு அனுமதிக்காமல் இருக்கவேண்டும். அல்லது வேட்பாளர் சார்ந்த கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை ஊடகங்களில் வரும் செய்தியை வைத்து தேர்தலைத் தள்ளி வைத்து இருந்தால் சரியான நடவடிக்கையாக இருக்காது. அடுத்து, தேர்தல் வெற்றி தோல்வி புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அந்த புகாருக்கான பயன் ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்க்கு உதாரணமாக ராதாபுறம் தேர்தல் முடிவைச் சொல்லலாம். வெறும் நாற்பது வாக்குகள் வித்தியாசம். மீண்டும் எண்ணிக்கை நடத்த கோரிக்கை வைக்க நிராகரிக்கப்படுகிறது. இப்போது இருக்கும் மின்னணு இயந்திரத்தில் மீண்டும் எண்ணுவது அவ்வளவு சிரமமானது அல்ல. ஆனால் தனக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து மறுப்பதுவிட்டது. வழக்கு நீதிமன்றம் செல்கிறது. விசாரணை முடிந்து தீர்ப்பு காலம் குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுகிறது. அதனால் நீதிமன்றத்திற்கு கூடுதல் சுமை. ஆனால் மீண்டும் எண்ணிக்கை நடத்தியிருந்தால், ஓரிரு நாட்களில் தீர்வு கிடைத்து இருக்கும். அடுத்த தேர்தலே வந்துவிட்டது. ஒருவேளை தீர்ப்பு வழக்குத் தொடுத்தவருக்கு, தோற்றதாக அறிவிக்கப்பட்டவருக்கு சாதகமாக இருந்தால், அந்த தீர்ப்பால் யாருக்கு என்ன பயன் தேர்தல் ஆணையம் தனக்கு இருக்கும் அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தினாலே புதிய சீர்திருத்தம் தேவையில்லாமல் போகும்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
09-ஜூன்-202117:50:18 IST Report Abuse
தமிழ்வேள் ஒருவர் தான் வாக்காளர் ஆக இருக்கும் ஊர் அடங்கியுள்ள சட்டமன்ற /நாடாளுமன்ற தொகுதியில் மட்டுமே வேட்பாளராக இயலும் ,என்று சட்டம் தேவை ...தொகுதி மாறி நின்று ஜெயித்தபின் தொகுதி பக்கமே வருவதில்லை ...ஆதார் என்னை ,வாக்காளர் என்னோடு இணைக்க வேண்டும் .....இரட்டை ஒட்டு ஊருக்கு ஒரு ஒட்டு , திருட்டு ஒட்டு இறந்தவர் பெயரிலான ஒட்டு அனைத்து ஒழியும் ...ஒருவர் இரெண்டு தொகுதிகளில் போட்டியிடும் அனுமதியும் ரத்து செய்யப்படவேண்டும் ...தேர்தல் காலம் ,சோதனை செய்து பார்க்கும் இடம் அல்ல ....இடையில் வென்றவர் ராஜினாமா செய்தால் , மீண்டும் தேர்தல் வைக்க ஆகும் மொத்த செலவை ராஜினாமா செய்யும் உறுப்பினரிடம் இருந்து வசூலிக்க வேண்டும் ....அதற்கு ஈடான சொத்தை வென்றவுடன் அடமானமாக வாங்கிக்கொள்ளலாம் ....
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
09-ஜூன்-202117:23:57 IST Report Abuse
Endrum Indian 2 வருடம் சிறை 6 வருடம் தடை சட்டம் நல்லாவே இருக்கு இதுக்கு பதிலாக கொஞ்சம் இந்த சட்டம் வந்தால் இன்னும் அருமையாக இருக்கும் "தவறு கண்டேன் சுட்டேன்" எவனுக்கும் தவறு செய்ய தைரியம் வரவே வராது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X