ஜூலையில் பார்லி., கூட்டத்தொடர் துவங்கும்?| Dinamalar

ஜூலையில் பார்லி., கூட்டத்தொடர் துவங்கும்?

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 08, 2021 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி : ''பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், ஜூலையில் துவங்கும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறினார்.பார்லிமென்ட் கூட்டத்தொடர் குறித்து, மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பிரஹலாத் ஜோஷி கூறியதாவது:கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக, பார்லிமென்ட் தொடர்கள் சரியாக நடக்கவில்லை. கடந்த ஆண்டு
 ஜூலை, பார்லி., கூட்டத்தொடர்,?

புதுடில்லி : ''பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், ஜூலையில் துவங்கும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறினார்.

பார்லிமென்ட் கூட்டத்தொடர் குறித்து, மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பிரஹலாத் ஜோஷி கூறியதாவது:

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக, பார்லிமென்ட் தொடர்கள் சரியாக நடக்கவில்லை. கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர், முன்கூட்டியே முடிக்கப்பட்டது. இதன்பின், ஜூலை - ஆகஸ்டில் நடக்க வேண்டிய மழைக்கால தொடர், செப்டம்பரில் குறைந்த நாட்களே நடத்தப்பட்டது. குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டும், பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட்டது.

தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவல் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு, ஒரு லட்சத்துக்கு கீழ் குறைந்துவிட்டது. பெரும்பாலான எம்.பி.,க்கள், லோக்சபா மற்றும் ராஜ்யசபா செயலக அதிகாரிகள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதனால், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், வழக்கம் போல் ஜூலையில் துவங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, தங்கள் தொகுதிகளில் சிறப்பாக கையாளும் எம்.பி.,க்களை பாராட்டி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கடிதம் எழுதியுள்ளார்.


எம்.பி.,க்கள் பதவியேற்பு


ராஜ்யசபாவுக்கு நியமன எம்.பி.,க்களாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட ஸ்வபன் தாஸ்குப்தா, மகேஷ் ஜெத்மலானி, கேரளாவிலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வான, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜான் பிரிட்டாஸ், சிவதாசன் ஆகியோர் நேற்று பதவியேற்றனர். ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X