அரசியல் செய்தி

தமிழ்நாடு

12 முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 08, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
சென்னை : சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் சார்ந்த சிறு கடனாளர்கள், கடன்களை திருப்பிச் செலுத்த, இரு காலாண்டுகளுக்கு, கூடுதல் அவகாசம் வழங்க, மத்திய நிதி அமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னரை வலியுறுத்தக்கோரி, 12 மாநில முதல்வர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.எதிர்க்கட்சிகள் ஆட்சி நடக்கும், ஆந்திரா, பீஹார், சட்டீஸ்கர், டில்லி, ஜார்கண்ட், கேரளா, மஹாராஷ்டிரா,
12 முதல்வர்கள், ஸ்டாலின் கடிதம்

சென்னை : சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் சார்ந்த சிறு கடனாளர்கள், கடன்களை திருப்பிச் செலுத்த, இரு காலாண்டுகளுக்கு, கூடுதல் அவகாசம் வழங்க, மத்திய நிதி அமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னரை வலியுறுத்தக்கோரி, 12 மாநில முதல்வர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஆட்சி நடக்கும், ஆந்திரா, பீஹார், சட்டீஸ்கர், டில்லி, ஜார்கண்ட், கேரளா, மஹாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களின் முதல்வர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:மத்திய அரசே, முழு அளவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, அனைத்து மாநிலங்களுக்கும், இலவசமாக வழங்க வேண்டும் என, நாம் வலியுறுத்தினோம். நம் அனைவரின் கூட்டு முயற்சி காரணமாக, பிரதமர் தன் முந்தைய கொள்கையை மாற்றி அமைத்துள்ளார்.

இத்தகைய சூழலில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு கடனாளர்கள் பிரச்னை தொடர்பாக, அனைத்து மாநில முதல்வர்களும், மீண்டும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்.

ஏப்ரல் முதல், உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில், அந்தந்த மாநில அரசுகளால், ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில், கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையின் போது, கடனாளர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் தற்போது அளிக்கப்படவில்லை.
எனவே, அவர்களின் கடன்களை திருப்பி செலுத்துவதை தள்ளி வைத்து, கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளேன்.
ஊரடங்கு அறிவிப்பை கருத்தில் வைத்து, 5 கோடி ரூபாய் வரை நிலுவை உள்ள அனைத்து சிறு கடனாளர்களுக்கும், கடன்களை திருப்பிச் செலுத்த, இரு காலாண்டுகளுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்.
இந்த கருத்தை, மத்திய நிதி அமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என, உங்களை கேட்டுக் கொள்கிறேன். இக்காலகட்டத்தில் நமது கூட்டு வலிமையை, நாம் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sadagopan Varadhachari - Hosur,இந்தியா
10-ஜூன்-202113:34:39 IST Report Abuse
Sadagopan Varadhachari குளோபல் டெண்டர் என்று வீர வசனம் பேசியவர்களெல்லாம் ஒன்று கூடி மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் கோரிக்கை வைத்தார்களாம் அதில் வெற்றி பெற்றார்களாம் . அந்நிய நாட்டு தடுப்பூசி இறக்குமதி செய்ய துடித்தவர்களுக்கு , மோடியின் பிடிவாதம் புரியாது .உண்மை பின்னணி என்ன தெரியுமா fizer நிறுவனம் விதித்த கட்டுப்பாடுகள் என்னவென்ரே தெரியாமல் எதையாவது உளறி கொட்டுவது. முதலாவது அவர்கள் நாட்டில் செய்த சொதனை அடிப்படையில் மருந்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் .இந்தியாவில் எந்த சோதனையும் செய்யக்கூடாது . இரண்டாவது ஊசி செலுத்துபவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் (உங்கள் பாணியில் கூறுவதானால் நடிகர் விவேக்குக்கு நடந்தது போல ) Fizer நிறுவனம் பொறுப்பாகாது . மூன்றாவது விலையை பொறுத்தவரை எங்கள் முடிவுக்குத்தான் கட்டுப்படவேண்டும் ,நாங்கள் விலையை உயர்த்தினால் ஆக்ஷேபணை செய்யக்கூடாது . இந்த குளோபல் டெண்டர் இந்த 13 மாநிலங்களுக்கு OK வா
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-ஜூன்-202122:33:30 IST Report Abuse
Pugazh V ஒரு புனே வாசகர் சற்றும் பொது அறிவோ அல்லது அரசியல் அறிவோ இல்லாமல் எதையோ எழுதியிருக்கிறார். அவர் எழுதிய லிஸ்டில் ஒன்றைக்கூட மத்திய அரசு செய்யவும் இல்லை. செய்ய முயற்சி கூட எடுக்க வில்லை என்று தமிழக மக்களுக்கு தெரியும். புனே காரருக்கு எப்படித் தெரியும் பாவம்.. எழுத விட்டுப் போகட்டும்.என்று இருக்கத் தான் முடியும். திருத்தவா முடியும்?? இல்லை திருந்தத் தான் போகிறாரா? மனநிலை பிறழ்ந்து விட்டால்.. நோ சான்ஸ்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-ஜூன்-202122:30:17 IST Report Abuse
Pugazh V அண்டைமாநிலங்களுடன் சுமுகமான உறவு. ஒன்றிய அரசுடன் இணக்கமான உறவு, தமிழ் நாட்டு எதிர்க்கட்சி களுடன் தோழமை என்று சிறப்பான நிர்வாகத் திறனுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்துகிறார். இதைப் பொறுத்துக்கொள்ள.இயலாதவர்கள் தான் இப்படி எதிர்மறை கருத்து போடுகிறார்கள். பாவம்.. வேறு என்ன செய்ய முடியும்???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X