கோர்ட் செய்தி

தமிழ்நாடு

போலீசாரை அவமதிப்போர் மீது நடவடிக்கை எச்சரிக்கை!

Updated : ஜூன் 08, 2021 | Added : ஜூன் 08, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
மதுரை :'கொரோனா தொற்று காலகட்டத்தில், போலீசார் கடும் மன அழுத்தத்தில் பணிபுரிகின்றனர். ஊரடங்கின் போது, அவர்கள் கேள்வி எழுப்பினால், தகுந்த முறையில் பதிலளிக்க வேண்டும். போலீசார் கடமையை செய்யும் போது, அவர்களை அச்சுறுத்தும், அவமதிக்கும் வகையில் யாரும் செயல்பட்டால், நீதிமன்றம் கருணை காட்டாது' என, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.திருச்சி
போலீசார், அவமதிப்பு, நடவடிக்கை , எச்சரிக்கை

மதுரை :'கொரோனா தொற்று காலகட்டத்தில், போலீசார் கடும் மன அழுத்தத்தில் பணிபுரிகின்றனர். ஊரடங்கின் போது, அவர்கள் கேள்வி எழுப்பினால், தகுந்த முறையில் பதிலளிக்க வேண்டும். போலீசார் கடமையை செய்யும் போது, அவர்களை அச்சுறுத்தும், அவமதிக்கும் வகையில் யாரும் செயல்பட்டால், நீதிமன்றம் கருணை காட்டாது' என, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருச்சி கோட்டை போலீசார், மே 29ல் ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சிலர் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல், முக கவசம் அணியாமல் ஆட்டோவில்
பயணித்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி, போலீசார் கேள்வி எழுப்பினர்.


மன அழுத்தம்அப்போது, ஆபாசமாக பேசி, பணி செய்யவிடாமல் தடுத்ததாக, போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் முன்ஜாமின் அனுமதிக்க கோரி, திருச்சியை சேர்ந்த காஜா ஹூசைன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்.நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அரசு தரப்பு, 'இவ்வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இருவர் தலைமறைவாகி விட்டனர்' என தெரிவித்தது.நீதிபதி உத்தரவு: கொரோனா தொற்று காலகட்டத்தில், போலீசார் கடும் மன அழுத்தத்தில் பணிபுரிகின்றனர். அப்பாவி மக்களின் உயிரை ஒரு வைரஸ் பறித்து வருகிறது. இதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.இச்சூழலில், போலீசார் பொதுப்பணியை நிறைவேற்றுகின்றனர். ஊரடங்கின் போது அவர்கள் கேள்வி எழுப்பினால், தகுந்த முறையில் பதில் அளிக்க வேண்டும். போலீசாரை அவமரியாதையாக பேசுதல் மற்றும் அச்சுறுத்தும் வகையிலான செயல்பாடுகளை கடுமையான ஒன்றாக பார்க்க வேண்டும்.


கருணை காட்டாதுதற்போதைய சூழலில், போலீசார் கடமையை செய்யும் போது, அவர்களை மிரட்டும் வகையில் செயல்பட்டால், சம்பந்தப்பட்டோருக்கு இந்நீதிமன்றம் கருணை காட்டாது.இவ்வழக்கில் மனுதாரர் வருத்தம் தெரிவித்து, 'எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன்' என, உயர் நீதிமன்ற பதிவுத்துறையிடம் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும்.மேலும், 10 ஆயிரம் ரூபாயை, மதுரை வழக்கறிஞர்களுக்கான எழுத்தர்கள் நலச்சங்கத்திற்கு, 'டிபாசிட்' செய்ய வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து, மனுதாரர் ஜூன், 14ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை மனுதாரரை போலீசார் கைது செய்யக் கூடாது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
satheesh - singapore,சிங்கப்பூர்
09-ஜூன்-202122:11:41 IST Report Abuse
satheesh தப்பி தவறி கூட போலீஸ்காரன் போடுற ஆட்டத்தை கண்டிச்சீராதீங்க . ஏனா நீங்களும் இதே மாதிரி தில்லாலங்கடி பண்ணிட்டு தானே judge ஆகியிருப்பீங்க
Rate this:
Cancel
satheesh - singapore,சிங்கப்பூர்
09-ஜூன்-202122:09:48 IST Report Abuse
satheesh ஆமா இந்த வழக்குக்கு உடனே தீர்ப்பு சொல்லிடுங்க. ஆனா போலீஸ்காரன் பண்ற தப்புக்கெல்லாம் case போட்டா வருஷங்கள் ஆனாலும் ஊமையா இருங்க.இந்த நாட்டுல நடக்குற அநியாயத்துக்கு அளவே இல்ல. எல்லா அரசியல்வாதிகளும் ஒரே மாதிரிதான் மக்களை கொடுமைப்படுத்துகிற வேலைய பாக்கறீங்க .
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
09-ஜூன்-202121:57:09 IST Report Abuse
g.s,rajan It is also quite sure that that Public innocents should not be punished,it is highly condemnable if the Police misuse their Power and doing atrocities to the common man they are not either Convicts or Criminals. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X