எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

கிண்டிக்கு மாறுகிறதா ஓமந்துாரார் மருத்துவமனை?

Updated : ஜூன் 09, 2021 | Added : ஜூன் 08, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை:சென்னை கிண்டி, கிங் ஆய்வக வளாகத்தில், 12.6 ஏக்கர் பரப்பளவில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவ மனை இடமாறுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.சென்னை, கிண்டி கிங் அரசு கொரோனா மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
 கிண்டி, ஓமந்துாரார், மருத்துவமனை,

சென்னை:சென்னை கிண்டி, கிங் ஆய்வக வளாகத்தில், 12.6 ஏக்கர் பரப்பளவில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.

புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவ மனை இடமாறுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.சென்னை, கிண்டி கிங் அரசு கொரோனா மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.


எதிர்பார்ப்பு

பின் அவர் அளித்த பேட்டி:கிண்டி கிங் வளாகத்தில், 250 கோடி ரூபாய் செலவில், பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என, முதல்வர் அறிவித்தார்.அதன்படி, பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைய இருக்கும் பகுதிகளை ஆய்வு செய்து, நிலம் தேர்வு செய்யும் பணி நடந்தது. நான்கு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 8.6 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை உள்ளது. அந்த வகையில், 12.6 ஏக்கர் பரப்பளவில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை உருவாக இருக்கிறது.மொத்தமாக, 47 ஏக்கர் பரப்பளவு உடைய இந்த வளாகத்தில், 12 துறைகளை உள்ளடக்கிய ஆராய்ச்சி நிலையம் மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.அதேபோல வெறி நாய்க்கடி, பாம்பு கடிக்கு இங்கு தான் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது.

பாம்பு கடிக்கு மருந்து உற்பத்தி செய்வதற்காக, கிண்டி கிங் ஆய்வகத்துக்கு, ஏற்கனவே மத்திய அரசு, 57 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.அதற்கான திட்டப்பணிகளும் துவக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் தடுப்பூசி இல்லை என்பது உண்மை தான்.

தமிழகத்துக்கு இதுவரை, ஒரு கோடியே, ஒரு லட்சத்து, 63 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில், 97 லட்சத்து, 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மூன்று லட்சம் தடுப்பூசிகள் வீணாகி உள்ளன. மத்திய அரசின் தொகுப்பில் இருந்து இந்த மாதத்திற்கு, 42 லட்சம் தடுப்பூசிகள் வரும். அதில், 5.5 லட்சம் தடுப்பூசிகள் வந்து விட்டன.இன்னும், 36.5 லட்சம் தடுப்பூசிகள் படிப்படியாக வரும் என எதிர்பார்க்கிறோம்.


ஆய்வு

மேலும், 18 முதல், 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக, தடுப்பூசிகளை பெறுவதற்கு, 99.84 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இதுவரை, 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. மீதமுள்ள தடுப்பூசிகள் படிப்படியாக வரும்.குன்னுாரில் உள்ள தடுப்பூசி மையத்தை ஆய்வு செய்தோம். குன்னுாரில் உள்ள, 'பாஸ்டியர்' தடுப்பூசி மையம், 1,907ம் ஆண்டு, பாஸ்டியர் என்பவரால் துவக்கப்பட்டது. அங்கு, 303 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அது ஒரு சிறந்த கட்டமைப்பு.

மத்திய அரசு தேவையான மூலப்பொருட்களை கொடுத்தால், மாதத்துக்கு, ஒரு கோடி தடுப்பூசி தயாரித்து கொடுப்போம் என, அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், எட்டாவது இடமாக, குன்னுாரிலும் தடுப்பூசி தயாரிக்கும் பணி துவக்க வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


நடவடிக்கை

இதைத் தொடர்ந்து, சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு வசதிகளை துவக்கி வைத்து, ஒப்பந்த டாக்டர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணையை, அமைச்சர்சுப்பிரமணியன் வழங்கினார்.

பின் அவர் அளித்த பேட்டி:இந்த மருத்துவமனைக்கு, அடையாறு ஆனந்த பவன், 60 ஆக்சிஜன் வசதி உடைய படுக்கைகளை வழங்கி உள்ளது. தமிழக அரசு சார்பில், 2,000 டாக்டர்கள், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதில், 1,485 டாக்டர்கள் பணியில் சேர்ந்துள்ளனர்.தமிழகத்தில் எங்கேயும் மருத்துவ பணியிடங்கள் காலியாக இல்லை.

அரசு அறிவித்த கட்டணத்துக்கும் மேலாக சிகிச்சை கட்டணம் வசூலித்த, 40க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடிதம்கறுப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்துகள், 3,060 என்ற எண்ணிக்கையில் வந்து உள்ளன. இதுவரை, 1,000த்துக்கும் மேற்பட்டோர், கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தற்போது, 35 ஆயிரம் 'ஆம்போடெரிசின் - பி' மருந்து தேவையாக உள்ளது. இது குறித்து பிரதமருக்கு, முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். வந்திருக்க கூடிய மருந்துகள், நோயின் தன்மைக்கு ஏற்ப வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.


சட்டசபை இடம் மாறுமா?

தி.மு.க., ஆட்சியில், சென்னை, ஓமந்துாரார் தோட்டத்தில், புதிய தலைமை செயலகம் கட்டப் பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின், அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றப் பட்டது. மீண்டும் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், புதிதாக பல்நோக்கு மருத்துவமனை கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில், ஓமந்துாரார் கட்டடத்தில் செயல்பட்டு வரும், பல்நோக்கு மருத்துவமனையை, கிண்டிக்கு மாற்றம் செய்ய, அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக, தினமும் 12 ஆயிரம் நோயாளிகள் வந்து செல்லும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவ மனையை விட, மிக குறைந்த அளவில் நோயாளிகள் வரும், ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை பராமரிப்புக்கு, ஆண்டுக்கு 3.5 கோடி ரூபாய்செலவிடப்படுகிறது.இதற்கு, மருத்துவமனை கட்டமைப்பு இல்லாமல், அலுவலக கட்டமைப்பில் கட்டப்பட்டதே காரணமாக கூறப்படுகிறது.

எனவே, ஓமந்துாரார் கட்டடத்தில் இருந்து, மருத்துவ கட்டமைப்பில் கட்டப்பட்ட கட்டடத்திற்கு மாற்றும்போது, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக, பல்நோக்கு மருத்துவமனையை மாற்ற முடியும்என, டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.ஓமந்துாரார் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு மருத்துவமனை, கிண்டிக்கு மாற்றப்பட்டால், அந்தக் கட்டடம் மீண்டும் சட்டசபையாகவோ அல்லது சட்ட மேலவையாகவோ அமைக்கப்படும் என தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
09-ஜூன்-202120:34:17 IST Report Abuse
spr ஓமந்தூரார் மருத்துவ மனையை மருத்துவ ஆராய்ச்சிக்காக புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க பயன்படுத்தலாம் அதனை கிண்டி கிங் ஆய்வகத்துக்கு வழங்கி அவர்களை அடுத்த கொரோனா அலைக்கான மருந்துகளை உற்பத்தி செய்ய பன்னாட்டு உதவியுடன் செயல்பட திட்டமிடலாம். சித்த அலோபதி ஹோமியோபதி ஆயுர்வேதம் என அனைத்தையும் ஒன்றிணைக்க மக்களுக்கு உதவ ஏற்ற திட்டங்களை அங்கே செயல்படுத்தலாம் சித்த மருத்துவக் கல்லூரி ஏற்படுத்தலாம் எப்படியும் கொள்ளையடிப்பதென தீர்மானம் செய்தாகிவிட்டது இப்படி செலவு செய்யும் பணத்தை அரசு மக்களுக்கு இலவச மருத்துவ உதவி செய்ய ஒதுக்கலாம் இறையன்பு போன்ற சில நல்லவர்களை திறமையானவர்களை சேர்த்துக் கொள்வது துரியோதனன் சபையில் பீஷ்மர் துரோணர் போன்ற பெரியவர்களை வைத்துக் கொண்டது போன்றது அவர்கள் அரசுக்கு கட்டுப்பட்டு 'கட்டப்பா' போல எந்த தவறு நடந்தாலும் வாய் திறக்க மாட்டார்கள் நாமும் அவர்களை மதிப்பதால் நடப்பதெல்லாம் நல்லதுக்கே என எண்ணி ஏமாறலாம்
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
09-ஜூன்-202118:51:17 IST Report Abuse
Murthy இதை கட்டியதால்தான் திமுக ஆட்சியை இழந்தது, மீண்டும் மருத்துவமனையை காலிசெய்து கெட்டபெயர் வாங்கிக்கொள்ளுமா திமுக அரசு?
Rate this:
Cancel
09-ஜூன்-202118:03:35 IST Report Abuse
சூரியா கிண்டியில் தேர்வு செய்துள்ள இடம் மிகச்சரியான இடம். வெளியூர், உள்ளூர்வாசிகள் எளிதாக வந்து போகலாம். ஆனால், இந்த வளாகத்திற்குள் வந்து போக, போக்குவரத்து நெரிசல் ஏற்படாவண்ணம் பாதை/வழி அமைக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X