அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா இறப்பை சான்றிதழில் பதிவு செய்ய வேண்டும்

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 08, 2021 | கருத்துகள் (11+ 18)
Share
Advertisement
சென்னை :'கொரோனா தொற்றால் இறந்தால், அவர்களின் இறப்பு சான்றிதழில், கொரோனா தொற்றால் இறப்பு என, சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும்' என, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:கொரோனா தொற்று காரணமாக, தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை, 27 ஆயிரத்து, 356 பேர் இறந்துள்ளனர்.சில வாரங்களாக, கொரோனா தொற்றால் இறக்க நேரிடுவோரின் சான்றிதழில், கொரோனா
கொரோனா இறப்பு, சான்றிதழ்,  பதிவு,வேண்டும்,

சென்னை :'கொரோனா தொற்றால் இறந்தால், அவர்களின் இறப்பு சான்றிதழில், கொரோனா தொற்றால் இறப்பு என, சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும்' என, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:
கொரோனா தொற்று காரணமாக, தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை, 27 ஆயிரத்து, 356 பேர் இறந்துள்ளனர்.சில வாரங்களாக, கொரோனா தொற்றால் இறக்க நேரிடுவோரின் சான்றிதழில், கொரோனா தொற்றால் இறந்தார் என, குறிப்பிடப்படுவது இல்லை.மாறாக, வேறு காரணங்களால் இறந்தனர் என, இறப்பு சான்றிதழ் தருவதாக, மாநிலம் முழுதும் பல்வேறு புகார்களை பாதிக்கப்பட்டோர் தெரிவித்து வருகின்றனர்.கொரோனா தொற்றால் இறப்போர் உடலை, கொரோனா வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி அடக்கம் செய்ய வேண்டும். வேறு காரணங்களால் இறந்ததாக இறப்பு சான்றிதழ் தருவதால், இறந்தவர்களின் உடல்களை, சிலர் வீட்டிற்கு எடுத்துச் சென்று, உற்றார் - உறவினர் பங்கேற்கும் வகையில், இறுதி சடங்கை மேற்கொள்கின்றனர்.


நிவாரண உதவி



இதனால், கொரோனா நோய் தொற்று முழு அளவில் பரவ சாத்தியம் உள்ளது. இறப்பு சான்றிதழில், வேறு காரணங்களை குறிப்பிடுவதால், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு, மத்திய - மாநில அரசுகள் அறிவித்துள்ள நிவாரண உதவிகள் கிடைப்பதில்லை.கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து, ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி குறித்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் நடந்தது.அப்போது அனைத்து மாநில அரசுகளும், மாவட்ட அதிகாரிகள் வாயிலாக, குழந்தைகளை கணக்கெடுத்து, 24 மணி நேரத்திற்குள், சிறார் நலக் குழுக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


வழிமுறை



எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் இறக்க நேரிட்டால், அவர்களின் இறப்பு சான்றிதழில், கொரோனா தொற்றால் தான் இறந்தனர் என்ற சரியான காரணத்தை குறிப்பிட்டு, அரசு சான்று அளிக்க வேண்டும். மேலும், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு, அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள், சரியான முறையில் சென்றடைவதையும், கொரோனா வழிமுறைகளை பின்பற்றி, இறந்தவர்கள் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11+ 18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-ஜூன்-202123:07:29 IST Report Abuse
Pugazh V மருத்துவ இயல்.பற்றியும் அறிவில்லை. சட்டம் பற்றியும் அறிவில்லை. இபிஎஸ் சொல்வது மாதிரி சான்றிதழ் தர இயலாது. கோவிட் தாக்கியவர் மரணமடைவது 1. நுரையீரல் வலுவிழந்து சுவாசத்தடை 2.மூச்சுக்குழலில் தடை 3. நுரையீரல் சுவாசத்திவிருந்து ஆக்சிஜன் பிரித்தெடுக்க இயலாமை. இவை.தான். இறப்பு க்கான காரணமாக டெத் சர்ட்டிபிகேட் டில் எழுத இயலும். வைறு சொந்த கருத்து சோகக் கருத்து எழுதினால் அந்த மருத்துவரை சட்டம் தூக்கி உள்ள போட்டுடும். இங்கே ஆமாம் சாமி.போடறவங்க..டெத் சர்ட்டிபிகேட் ஃபார்ம் பார்த்திருக்கிறீர்களா? இல்லை என்று தெரிகிறது. அதனால் வாயை மூடிக்கொண்டு இருங்கள்.
Rate this:
Cancel
09-ஜூன்-202118:35:33 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு மரண சான்றிதழிழ் இறப்புக்கான காரணம் என்ற ஒரு வரியே இல்லை.. இதுதான் தீயமுகாவின் விஞான ஊழல் என்பதோ ?
Rate this:
Cancel
lana -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜூன்-202114:09:31 IST Report Abuse
lana இது உண்மை தான் எனது நண்பரின் மனைவிக்கு இறப்பு நிமோனியா வித் கோவிட் என்று சான்று வழங்கப்பட்டு உள்ளது. அவருக்கு கோவிட்டுக்கு முன் எந்த நோயும் இல்லை.
Rate this:
வணங்காமுடி திராவிடன் - அஞ்சாமை திராவிடர் உடமையடா ,இந்தியா
09-ஜூன்-202114:59:19 IST Report Abuse
வணங்காமுடி திராவிடன் ஹா ஹா அறிவு ஜீவி என் உங்கள் நண்பரின் மனைவி CT ஸ்கேன் எடுத்து இருந்தால் அதில் பாருங்கள் அங்கே தெரியும் % எந்த அளவுக்கு பாதிப்பு நுரையீரல் என்று , இப்படி ஆகும்போது நிமோனியா வந்திருக்கும் , இல்லை நீ புருடா விட்டு கருது போடு இருந்தால் நீ புளுகி கொண்டு இருக்க என்று அர்த்தம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X