கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோவில் நிலம் 47 ஆயிரம் ஏக்கர் மாயம்?

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 08, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை தமிழகத்தில், 47 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலம் மாயமானதாக கூறப்படுவது குறித்தும், அரசின் கொள்கை குறிப்பில் குறிப்பிட்டுள்ள நில விபரங்கள் குறித்தும், விரிவான பதில் மனு தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. சேலம், கன்னங்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:சட்டசபையில் ஆண்டுதோறும், அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு
கோவில் நிலம் 47 ஆயிரம் ஏக்கர் மாயம்?

சென்னை தமிழகத்தில், 47 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலம் மாயமானதாக கூறப்படுவது குறித்தும், அரசின் கொள்கை குறிப்பில் குறிப்பிட்டுள்ள நில விபரங்கள் குறித்தும், விரிவான பதில் மனு தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

சேலம், கன்னங்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:
சட்டசபையில் ஆண்டுதோறும், அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்படும். 1985 -- 87ல் தாக்கல் செய்த, பண்பாடு மற்றும் அறக்கட்டளை துறையின் கொள்கை குறிப்பில், மத நிறுவனங்களுக்கு, 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த, 2018 -- 2020ல் தாக்கல் செய்யப்பட்ட குறிப்பில், 4.78 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பற்றி, எந்த விளக்கமும் இல்லை.
மாயமான, 47 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்களை மீட்க, அரசு தரப்பில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


ஆக்கிரமிப்பு



கோவை மாவட்டம், சூலுார் தாலுகாவில் உள்ள தண்டபாணி ஆலயம், கரிவரதராஜ பெருமாள் கோவில்; அன்னுார் தாலுகாவில் உள்ள கணேசர் ஆலயம்; ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள கோட்டை பெருமாள் கோவில், ஸ்ரீபிரசன்ன வெங்கடராமசாமி கோவில்.
சென்னிமலையில் உள்ள சுப்ரமணியசாமி கோவில், பூசாரிவேளாள தம்பிரான் கட்டளை; திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள அவினாசியப்பர் கோவில் ஆகியவற்றுக்கு சொந்தமான சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீட்பதற்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


மீட்க வேண்டும்



மனு, நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் ரிச்சர்டுசன் ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசின் கொள்கை விளக்க குறிப்பில், 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் குறித்து, எந்த விளக்கமும் இல்லை என, மனுதாரர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பது சரி என்றால், உண்மையில் அதிர்ச்சி அளிக்கிறது. மாயமான, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் குறித்து, கொள்கை குறிப்பில் கூறியிருந்தால், அவற்றை அடையாளம் கண்டு, மீட்க வேண்டும்.அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்டுசன், கோவில்கள் தொடர்பான வழக்குகளுக்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்பு அமர்வு, 4.78 லட்சம் ஏக்கர் நிலம் தொடர்பாக, உத்தரவு பிறப்பித்திருப்பதாக தெரிவித்தார். ஆனால், 2018 -- 20 கொள்கை குறிப்பில் கூறப்பட்டுள்ள, 4.78 லட்சம் ஏக்கர் நிலம் சம்பந்தமாக, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், 1985 -- 87ம் ஆண்டில் தாக்கல் செய்த குறிப்பில், 5.25 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாக கூறப்பட்டு இருப்பதாகவும், மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


மாயம்



ஆரம்ப நிலையில் பார்க்கும் போது, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மாயமாகி இருப்பது தெரிகிறது. எனவே, 1985 - -87ம் ஆண்டு, 2018 -- 20ம் ஆண்டு கொள்கை குறிப்பில் கூறியுள்ள நில விபரங்களை, சர்வே எண்ணுடனும், பதில் மனுவாக, அரசு தாக்கல் செய்ய வேண்டும். மனுவில் குறிப்பிட்டுள்ள, ஏழு கோவில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், அதில் இருந்து கிடைக்கும் வருவாய் விபரங்கள் குறித்தும், அரசு பதில் அளிக்க வேண்டும்.
கோவில் மற்றும் அரசுக்கு சொந்தமான சொத்து இல்லை என, எந்த அடிப்படையில், சூலுாரில் சார் பதிவாளராக இருந்த இளங்கோ, அன்னுார் சார் பதிவாளருக்கு கடிதம் அனுப்பினார் என, அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, ஜூலை, 5க்கு தள்ளி வைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-ஜூன்-202123:11:56 IST Report Abuse
Pugazh V Anaththaa bahrain, அந்த நாலு பேரைக் காணவேயில்லை சார். தமிழக த்தில் கோவிட் பிரச்சினை ஆக்சிஜன் பிரச்சினை தடுப்பூசி பிரச்சினை இவற்றில் எதைப்பற்றியும் அந்த நாலு பேர் இதுவரை எதுவுமே சொல்லவில்லையே அதைப்பற்றி எதாவது எழுதுங்கள் பார்ப்போம்?????
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
09-ஜூன்-202117:24:08 IST Report Abuse
sankaseshan பத்திர பதிவாளர்களை நொங்கு எடுத்தால் உண்மையை கக்குவானுங்க கழக கண்மணிகள் சிக்குவானுங்க
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-ஜூன்-202116:35:31 IST Report Abuse
J.V. Iyer முதலில் கோவில் நிலம். சீக்கிரம் உங்கள் வீடு சொத்து, நிலமே காணாமல் போகும். நீங்கள் வோட்டு போட்டதற்கு நன்றி கூறவேண்டாமா? இதுவெல்லாம் எதிர்பார்த்ததுதானே??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X