அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய அரசு என அழைப்பது தி.மு.க.,வின் திசை திருப்பும் தந்திரம்

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 08, 2021 | கருத்துகள் (66)
Share
Advertisement
மதுரை :தி.மு.க., அரசு மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்து வருவது சில பிரச்னைகளை திசை திருப்பும் தந்திரம் என அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்ரி தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: பாரதம் என அழைக்கப்பட்ட நம் நாடு 1951ல் அரசியல் அமைப்பு சட்டம் வந்த பின் இந்தியா என அழைக்கப்பட்டது. அதற்கு முன்பு இருந்த 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை சுதந்திரத்திற்கு பின் ஒன்றிணைத்து நாட்டை
ஒன்றிய அரசு , தி.மு.க.,திசை திருப்பும் தந்திரம்

மதுரை :தி.மு.க., அரசு மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்து வருவது சில பிரச்னைகளை திசை திருப்பும் தந்திரம் என அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்ரி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: பாரதம் என அழைக்கப்பட்ட நம் நாடு 1951ல் அரசியல் அமைப்பு சட்டம் வந்த பின் இந்தியா என அழைக்கப்பட்டது. அதற்கு முன்பு இருந்த 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை சுதந்திரத்திற்கு பின் ஒன்றிணைத்து நாட்டை கட்டமைத்தனர். ஆட்சி, ஆளுமை கொடுப்பதற்காக பல மாநிலங்களாக பிரித்தனர். யூனியன் ஆப் ஸ்டேட்ஸ் என்றால் ஒன்றியம். ஊராட்சிகள் இணைந்திருப்பதை யூனியன், ஊராட்சி ஒன்றியம் என்கிறோம். மாநிலங்கள் இணைந்ததால் வந்தது தான் ஒன்றியம். இந்நிலையில் இந்திய அரசு, ஒன்றிய அரசு மத்திய அரசு என எப்படி அழைத்தாலும் தவறில்லை. தி.மு.க., ஒன்றிய அரசு என அழைப்பதால் யாரும் கோபப்பட வேண்டாம்.'மாநிலங்கள் இல்லாமல் இந்திய நாடு இல்லை' என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுவது தவறு.

இந்திய நாடு இல்லாமல் மாநிலங்கள் இல்லை என்பதே சரி. எந்த மாநிலங்களுக்கும் இந்திய நாட்டை விட்டு பிரிய எந்த அதிகாரமும் கிடையாது. ஒரு மாநிலத்தை சேர்க்கும், பிரிக்கும் அதிகாரம் பார்லிமென்டிற்கு தான் உண்டு.மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதை தி.மு.க., கண்டுபிடித்ததாக பார்க்கிறேன். கொரோனா சூழலில் சில பிரச்னைகளை திசை திருப்பும் தி.மு.க.,வின் தந்திரம் இது. தி.மு.க., ஊழல் வழக்குகள், உட்கட்சி பிரச்னைகள் வெளியே வராமல் இருக்கமத்திய அரசை குறை கூறாமல் உள்ளனர். மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதால் யாருக்கும் லாபமும் இல்லை, என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagharajan Lambotharan - chennai,இந்தியா
13-ஜூன்-202113:24:55 IST Report Abuse
Thiagharajan Lambotharan ஹாஹா. உண்மையான பிரச்னைகளிருந்து மக்களை திசை திருப்பி பிரித்தாளும் சூழ்ச்சி செய்வதில் P.H.D. பெற்றவர்களா திமுகவை குறை சொல்வது. அது சரி. ஒன்றுமில்லாத ஒன்றிய பிரச்னை ஏன் உங்களுக்கு இவ்வளவு வயிற்றெரிச்சலை கொடுக்கிறது? சங்கிகளாக திகழும் தமிழர்கள் இந்த சூட்சுமத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-ஜூன்-202123:14:25 IST Report Abuse
Pugazh V ___குட்டிங்கலாம் பஞ்ச் டயலாக் சொல்லுதுங்கபா....
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
09-ஜூன்-202121:51:44 IST Report Abuse
K.n. Dhasarathan எதை திசை திருப்ப போகிறார்கள் ? கோவிட் தொற்றுக்கு வெளிப்படையான, சிறந்த நடவடிக்கை என்று அனைவரும் எதிர்க்கட்சி உள்பட பாராட்டும்போது, இப்படி பேசுவதுதான் திசை திருப்பும் செயல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X