இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 09, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி :''இந்திய பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை பிரபலப்படுத்த, இளம் எழுத்தாளர்கள் அடங்கிய குழுவை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறியிருப்பதாவது:மாணவர்களின் சிந்தனை மற்றும்
 இளைஞர்கள்,   பிரதமர் மோடி , அழைப்பு

புதுடில்லி :''இந்திய பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை பிரபலப்படுத்த, இளம் எழுத்தாளர்கள் அடங்கிய குழுவை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடி, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறியிருப்பதாவது:மாணவர்களின் சிந்தனை மற்றும் கற்பனைத்திறன்களை ஊக்குவித்தல், மாணவர்களிடம் தலைமை பண்பை உருவாக்குதல் ஆகியவற்றை லட்சியமாக வைத்துத் தான், புதிய தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
நாம் அடுத்த ஆண்டு, 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். இதையொட்டி, 'யுவ' என்ற பெயரில், தேசிய அளவிலான திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் வாயிலாக, 30 வயதுக்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்கள் அடங்கிய குழு உருவாக்கப்படும். சர்வதேச அளவில் இந்தியாவை முன்னிலைப்படுத்தும் வகையில் சிறப்பாக எழுதும் இளம் எழுத்தாளர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்திய பாரம்பரியம், கலாசாரம், சிந்தனை, இலக்கியம் ஆகியவற்றை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் வகையில் எழுத வேண்டும்.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய புத்தக அறக்கட்டளை இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது. mygov.in இணையதளம் வழியாக நடத்தப்படும் போட்டியின் முடிவில், 75 சிறந்த இளம் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
10-ஜூன்-202118:49:22 IST Report Abuse
g.s,rajan ஆமா மோடிஜி படித்த இளைஞர்களுக்கு வேலை வேண்டும் இந்தியாவில் பல இளைஞர்கள் வீட்டில் சும்மாவே உட்கார்ந்து கொண்டு வெட்டியாக உள்ளார்கள் ஒரு படத்தில் வடிவேலு கூட நகைச்சுவையாக சொல்லுவார் சும்மா இருந்து பாருங்கள் அது எவ்வளவு பெரிய கஷ்டம் என்று உங்களுக்குத் தெரியும் என்று கூறுவது நூறு சதவீதம் சரிதானே . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
09-ஜூன்-202123:31:36 IST Report Abuse
g.s,rajan Modiji What about Employment for Youngsters,there is no job and no Income,what will they do????they are nowadays highly frustrated. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
09-ஜூன்-202117:43:08 IST Report Abuse
Rajas ஆமாம் சொன்னபடி வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலை என்று கொடுத்து இதுவரை 14 கோடி பேருக்கு வேலை கொடுத்து விட்டீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X