ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் : தென்னாப்பிரிக்கா பெண் உலக சாதனை

Updated : ஜூன் 09, 2021 | Added : ஜூன் 09, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மாலி நாட்டு பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.ஆப்ரிக்க நாடான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கோஷியாமி தமாரா சித்தோல் என்ற 37 வயது பெண்ணுக்கு ஏற்கனவே இரட்டை குழந்தைகள் உள்ளன. இந்நிலையில்
South Africa, woman, birth, pregnancy, world record, ஒரே பிரசவம், 10 குழந்தைகள், தென்னாப்பிரிக்கா, பெண், உலக சாதனை

பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மாலி நாட்டு பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்க நாடான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கோஷியாமி தமாரா சித்தோல் என்ற 37 வயது பெண்ணுக்கு ஏற்கனவே இரட்டை குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்திருந்தார்.


latest tamil news


7-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து பிரிட்டோரியா நகரி்ல் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு சிசேரியன் மூலம் 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என 10 குழந்தைகள் பிறந்தன. தாயும், 10 குழந்தைகளும் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது.


உலக சாதனை முறியடிப்பு


இதற்கு முன்னர் மாலி நாட்டைச் ஹலிமா சிசி, என்ற 25 வயது இளம்பெண் கடந்த மே மாதம் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளை பெற்றெடுத்தார். இது உலக சாதனையாக கருதப்பட்டது. தற்போது தென்னாப்பிரிக்க பெண் 10 குழந்தைகளை பெற்றெடுத்து ஹலிமா சிசியின் சாதனையை முறியடித்துள்ளார். இதுதான் இப்போது உலக சாதனையாக கருதப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஜூன்-202115:59:27 IST Report Abuse
ஆரூர் ரங் ஒரே கல்லில் பத்து மாங்கா. பெயர் வைப்பதில் இருந்து 😇. வளர்க்கும் பொறுப்பு 🤔பிரச்சனைதான்.
Rate this:
Cancel
Ramanan K - Bangalore,இந்தியா
09-ஜூன்-202113:27:50 IST Report Abuse
Ramanan K இந்த தாய் பெண்களுக்கு ஒரு முன்மாதிரி. இந்த காலத்தில் குழந்தை வேண்டாம் என்று தள்ளி போடும் பெண்கள் இந்த தாய்க்கு மரியாதை செலுத்த வேண்டும்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
09-ஜூன்-202113:08:17 IST Report Abuse
S. Narayanan வாழ்த்துக்கள். அரசு உதவி செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X