சோக்சி கடத்தலில் தொடர்பில்லை: காதலி பார்பரா திட்டவட்டம்

Updated : ஜூன் 09, 2021 | Added : ஜூன் 09, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி : ''வைர வியாபாரி மெஹுல் சோக்சி கடத்தப்பட்டதற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை,'' என, அவரது காதலி என கூறப்படும் பார்பரா ஜராபிகா தெரிவித்தார்.மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி சோக்சி, வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, வட அமெரிக்க நாடான ஆன்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு 2018ல் தப்பி சென்றார். ஆன்டிகுவாவில் இருந்து கடந்த மாதம்,
Mehul Choksi, girl friend, Barbara, Barbara Jarabica

புதுடில்லி : ''வைர வியாபாரி மெஹுல் சோக்சி கடத்தப்பட்டதற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை,'' என, அவரது காதலி என கூறப்படும் பார்பரா ஜராபிகா தெரிவித்தார்.

மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி சோக்சி, வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, வட அமெரிக்க நாடான ஆன்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு 2018ல் தப்பி சென்றார். ஆன்டிகுவாவில் இருந்து கடந்த மாதம், திடீரென மாயமானார். அவர், வட அமெரிக்க நாடான கியூபாவுக்கு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆன்டிகுவா அருகே உள்ள மற்றொரு தீவு நாடான டொமினிக்காவில், சோக்சி கைது செய்யப்பட்டார். அவரை சிலர் கடத்தியதாக, சோக்சியின் வழக்கறிஞர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக டொமினிக்கா போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.


latest tamil news



போலீசில் சோக்சி அளித்த புகாரில், 'என் தோழி பார்பரா ஜராபிகாவின் வீட்டுக்குச் சென்றபோது 10 பேர் என்னை தாக்கி கடத்திச் சென்றனர். அதில் இருவர் இந்தியர்கள்' என, தெரிவித்துள்ளார்.

இது குறித்து பார்பரா ஜராபிகா கூறியதாவது: கடந்த ஆண்டு தான், ஆன்டிகுவா வந்தேன். ராஜ் என்ற பெயரில் தான் சோக்சி எனக்கு அறிமுகமானார். அவருடன் நட்பாக பழகி வந்தேன். நாளடைவில், என்னுடன் நெருக்கமாக பழக முயன்றார். எனக்கு வைர மோதிரங்கள், 'பிரேஸ்லெட்' பரிசளித்தார். அவை அனைத்தும் போலி என்பது பின் தெரியவந்தது.

சோக்சி மாயமான விவகாரத்தில், அவரது வழக்கறிஞரும், குடும்பத்தினரும் என் பெயரை தேவையின்றி இழுக்கின்றனர். இதனால், நானும் என் குடும்பத்தினரும், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். சோக்சி கடத்தப்பட்டதில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
09-ஜூன்-202111:36:05 IST Report Abuse
mindum vasantham He is wheel chair does he require that girl
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
09-ஜூன்-202110:00:16 IST Report Abuse
R.RAMACHANDRAN போலியான வைர வியாபாரிக்கெல்லாம் ஆயிரக் கணக்கான கோடிகள் கடனளித்துவிட்டு தப்பிக்கச் செல்ல வைத்தவர்களை பொறுப்பாளிகளாக்கி அவர்களிடமிருந்து வசூலித்து வங்கி பணிகளில் இருக்கும் குற்றவாளிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
09-ஜூன்-202109:38:22 IST Report Abuse
Indhuindian சட்டி சுட்டதடா கை விட்டதடா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X