அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் திமுக: முருகன்

Updated : ஜூன் 09, 2021 | Added : ஜூன் 09, 2021 | கருத்துகள் (90)
Share
Advertisement
சென்னை : 'நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது என்பதை உணர்ந்த தி.மு.க. வினர் மக்களை ஏமாற்றும் மாயாஜாலங்களில் ஈடுபட தொடங்கி உள்ளனர்' என தமிழக பா.ஜ. தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது. காங்கிரஸ் -- தி.மு.க. கூட்டணி ஆட்சியில் தி.மு.க. வை சேர்ந்த காந்திசெல்வன் மத்திய சுகாதார
NEET exam, DMK, L Murugan, BJP, Murugan, medical entrance test,நீட்

சென்னை : 'நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது என்பதை உணர்ந்த தி.மு.க. வினர் மக்களை ஏமாற்றும் மாயாஜாலங்களில் ஈடுபட தொடங்கி உள்ளனர்' என தமிழக பா.ஜ. தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது. காங்கிரஸ் -- தி.மு.க. கூட்டணி ஆட்சியில் தி.மு.க. வை சேர்ந்த காந்திசெல்வன் மத்திய சுகாதார துணை இணை அமைச்சராக இருந்த போது தான் நீட் தேர்வு குறித்த அறிவிப்பு மத்திய அரசின் 'கெஜட்டில்' முதன் முதலில் வெளியானது.

கடந்த 2017ம் ஆண்டு முதல் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடந்து வருகிறது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 'ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம்' என வாக்குறுதி அளித்தார். ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது என்பதை உணர்ந்த தி.மு.க. வினர் மக்களை ஏமாற்றும் மாயஜாலங்களில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.


latest tamil newsசமீபத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழுவை ஸ்டாலின் அமைத்துள்ளார். இக்குழு செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பதை வேண்டுமானால் ஆராயலாமே தவிர நீட் தேர்வு பற்றி எந்த புதிய விஷயத்தையும் கூற முடியாது.

வீம்புக்காக தமிழக அரசு மேற்கொள்ளும் இதுபோன்ற பொறுப்பற்ற செயல் நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்கள் மத்தியில் நிச்சயம் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசியல் செய்யாமல் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும். இவ்வாறு முருகன் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (90)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu - tirunelveli,இந்தியா
09-ஜூன்-202120:31:01 IST Report Abuse
muthu LET NEET SHALL BE CONDUCTED FOR CENTRAL AIDED MEDICAL COLLEGE ,NOT FOR STATE AIDED MEDICAL COLLEGE LET STATE DECIDE THE ADMISSION OF STATE AIDED MEDICAL COLLEGE/ DONT TAKE AWAY THE POOR PEOPLE UPLIFT
Rate this:
Cancel
Ganesh -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜூன்-202120:08:21 IST Report Abuse
Ganesh ஆட்சிக்கு வந்தாச்சு இப்போ வேற வழியில்லை. இப்போ மாணவர்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லை.நீட் தேர்வு நடந்தா இவர்களுக்கு ஆதரவு குறையும்
Rate this:
Cancel
R PURUSHOTHAMAN - Arni,இந்தியா
09-ஜூன்-202117:03:25 IST Report Abuse
R PURUSHOTHAMAN Very bad Murugan sir, approach central government to consider for cancellation of neet exam due to reasons well known by you
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X