கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு

Updated : ஜூன் 09, 2021 | Added : ஜூன் 09, 2021 | கருத்துகள் (3)
Share
சென்னை: தடுப்பூசி முன்பதிவிற்கான கோவின் இணைய தளத்தில், 12வது மொழியாக தமிழ் மொழி சேர்க்கப்பட்டது.கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள 'கோவின்' இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த வெப்சைட்டில் முதலில் ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டும் பயன்பாட்டில் இருந்தன. பின்பு மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி உள்ளிட்ட 9 மொழிகள் சேர்க்கப்பட்டன. ஆனால், தமிழ் மொழி
COwin, Tamil, Keep India Safe, Corona Virus, India Fights Corona

சென்னை: தடுப்பூசி முன்பதிவிற்கான கோவின் இணைய தளத்தில், 12வது மொழியாக தமிழ் மொழி சேர்க்கப்பட்டது.

கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள 'கோவின்' இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த வெப்சைட்டில் முதலில் ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டும் பயன்பாட்டில் இருந்தன. பின்பு மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி உள்ளிட்ட 9 மொழிகள் சேர்க்கப்பட்டன. ஆனால், தமிழ் மொழி இல்லை. இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


latest tamil news



இதனை தொடர்ந்து 'கோவின்' இணையதளத்தில் தமிழையும் சேர்க்குமாறு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இரு தினங்களில் தமிழ்மொழி சேர்க்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், 12வது மொழியாக கோவின் இணைய தளத்தில் தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X