பொது செய்தி

இந்தியா

கலைக் கூடங்கள் இல்லாத காஷ்மீர்: பொது இடங்களை வண்ணங்களால் வசப்படுத்திய ஓவியர்கள்!

Updated : ஜூன் 09, 2021 | Added : ஜூன் 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஸ்ரீநகர்: பல நூற்றாண்டுகள் பழமையான கலை மற்றும் கைவினைத் தொழிலை காஷ்மீர் கொண்டிருந்தாலும், கலைஞர்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்த எந்த கலைக்கூடங்களும் இல்லாத நிலை உள்ளது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.ஸ்ரீநகர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உள்ளூர் ஓவிய கலைஞர்களை, நகரிலுள்ள முக்கிய சுவர்கள், பாலங்கள்,
Kashmir, Artists, Paint, Public Spaces, Showcase, காஷ்மீர், ஓவியர், பொது இடங்கள்

ஸ்ரீநகர்: பல நூற்றாண்டுகள் பழமையான கலை மற்றும் கைவினைத் தொழிலை காஷ்மீர் கொண்டிருந்தாலும், கலைஞர்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்த எந்த கலைக்கூடங்களும் இல்லாத நிலை உள்ளது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஸ்ரீநகர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உள்ளூர் ஓவிய கலைஞர்களை, நகரிலுள்ள முக்கிய சுவர்கள், பாலங்கள், சுரங்கப்பாதைகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்த அனுமதித்தனர். முதல் முறையாக அவர்களுக்கு தங்கள் திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு வழங்கப்பட்டது. அது அவர்களுக்கு மக்கள் பார்த்து அங்கீகரிக்கும் வகையில் அமைந்தது. இது காஷ்மீர் கலைஞர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. காஷ்மீரின் புகழ்பெற்ற மலைவாசஸ்தலங்கள், சால்வைகள், கோயில்கள், ஷிகாரா எனும் படகு இல்லங்களை வரைந்துள்ளனர்.


latest tamil news



இது குறித்து உள்ளூர் ஓவியர்கள் கூறியதாவது: எங்கள் திறமையை வெளிப்படுத்த எங்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் உருவாக்கிய ஓவியங்களை மக்கள் பாராட்டுகிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களும் எங்களின் வேலைகளை பார்த்து மகிழ்ச்சியடைகின்றனர். ஓவியர்கள் தொடர்ந்து வரைய வேண்டும். கைவிட்டுவிடக்கூடாது. மனம் தளரக்கூடாது. ஓவியங்களை வரைய நிறைய பொறுமை தேவை. அது கடவுளின் பரிசு. இங்கே கேலரிகள் இல்லை. அதனால் வாய்ப்பு இல்லை. லடாக்கில் கூட கேலரி உள்ளது. ஆனால் ஸ்ரீநகரில் இல்லை.


latest tamil news



கலை படிக்கும் மாணவர்களுக்கும் தங்கள் திறமையை வெளிப்படுத்த இடமில்லை. அவர்களில் சிலர் சாதாரண பெயின்டர்களாக மாறுகிறார்கள். கலைஞர்களுக்கு வாய்ப்பும் இல்லை. வேலையும் இல்லை. தங்கப் பதக்கம் வென்ற எங்கள் நண்பர் ஒருவர் கொத்தனாராக வேலை செய்கிறார். 5 ஆண்டுகள் கலை படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு அரசு ஏதாவது செய்ய வேண்டும். இல்லை என்றால் ஆர்வம் இழந்து கலைஞர்கள் யாரும் இல்லாத நிலை ஏற்படும். யூனியன் பிரதேசத்துக்கு வெளியே இருப்பவர்களுக்கு ஏராளமான வேலைகள் உள்ளன. இவ்வாறு கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
09-ஜூன்-202115:43:21 IST Report Abuse
Srinivasan Rangarajan தேசிய நீரோட்டத்தில் இணைந்து எல்லா நலன்களும் பெற வாழ்த்துகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X