பொது செய்தி

தமிழ்நாடு

கோயில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியீடு

Updated : ஜூன் 09, 2021 | Added : ஜூன் 09, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பொதுமக்கள் அதன் விவரங்களை பார்த்து பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றுக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றின் உரிமை ஆவணங்களை சரிபார்க்கும் பணி
Hindu Religious, Charitable Endowments Department, LandDetails, Temple

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பொதுமக்கள் அதன் விவரங்களை பார்த்து பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றுக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றின் உரிமை ஆவணங்களை சரிபார்க்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது. கோவில் நிலங்களின் உரிமை ஆவணங்களை வருவாய் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 'தமிழ் நிலம்' மென்பொருளோடு ஒப்பீடு செய்து முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள் பகுதி அளவு ஒத்துப்போகும் இனங்கள் மற்றும் புதிய இனங்கள் என பிரிக்கப்பட்டு உள்ளன.


latest tamil newsஅவற்றில் முதல்கட்டமாக 3 லட்சத்து 43 ஆயிரத்து 647 ஏக்கர் நிலங்கள் முழுவதும் ஒத்துப்போகும் இனங்களாக கண்டறியப்பட்டு அந்நிலங்களின் 'அ' பதிவேடு நகர நில அளவை பதிவேடு சிட்டா போன்றவை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மொத்தம் உள்ள கோவில் நிலங்களில் 72 சதவீதம், அதாவது மொத்தமுள்ள 4.78 லட்சம் ஏக்கர் நிலங்களில் முதல் கட்டமாக 3.43 லட்சம் ஏக்கர் நில விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த இணையதளத்தில் 'திருக்கோவில் நிலங்கள்' என்ற தலைப்பை தேர்வு செய்து அதன்பின் பட்டியலிட்டுள்ள கோவிலை தேர்வு செய்ததும் கோவில்களுக்கு சொந்தமான முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள் திரையில் தோன்றும். அதன் விவரங்களை பார்வையிடலாம்; பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
09-ஜூன்-202119:13:08 IST Report Abuse
jagan நல்ல விஷயம். இதே போல், குத்தகை வாடகையும் இப்போதுள்ள சந்தை நிலவரப்படி முறை செய்து நற்பணிகள் செய்தால் இன்னும் மகிழ்ச்சி. . தீய க வை உள்ளே சேர்க்காமல் தூர துரத்தி அடித்துவிட்டு. அதிமுகவில் இருந்து இணைந்தவர்களுக்கு இன்னும் அதிக அமைச்சர் பதவிகளும் குடுத்து, பழய தீயமுக காரங்களை கீழே இறக்கினால் இன்னும் மகிழ்ச்சி
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-ஜூன்-202117:15:33 IST Report Abuse
Pugazh V ? இதுவரை எந்த முதல்வரும் செய்யாத டிஜிட்டல் விஷயத்தைச் செய்திருப்பதைப் பாராட்ட இயலவில்லை எனில் சும்மாவாவது இருக்கலாம்.
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
09-ஜூன்-202116:52:06 IST Report Abuse
Ram கொள்ளை அடித்தது போக மீதி யுள்ளதை ஏற்றுகிறார்களா , மக்களுக்கு ஒவொரு கோவிலுக்கும் எவ்வளவு சொத்து இருந்தது என்று எப்படி தெரியும் . லோக் அயுக்த நீதிபதியை வைது ஆடிட்டிங் செய்து வெளியிட்ட கணக்கு சரிதானா என்று பார்க்கவேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X