ஊரடங்கில் மக்கள் வெளியில் சுற்றுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated : ஜூன் 09, 2021 | Added : ஜூன் 09, 2021 | கருத்துகள் (21) | |
Advertisement
சென்னை: ஊரடங்கில் மக்கள், வெளியில் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.கோவிட் காலத்தில் விலங்குகளுக்கு, உணவு மற்றும் குடிநீர் வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வெளியில் வழக்கமான செயல்கள் நடக்கின்றன. இதனை ஒழுங்குபடுத்த
சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கு,  தமிழக அரசு, மக்கள்,

சென்னை: ஊரடங்கில் மக்கள், வெளியில் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கோவிட் காலத்தில் விலங்குகளுக்கு, உணவு மற்றும் குடிநீர் வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வெளியில் வழக்கமான செயல்கள் நடக்கின்றன. இதனை ஒழுங்குபடுத்த வேண்டும். ஊரடங்கில், மக்கள் வெளியில் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அசவுகரியத்தை குறைக்கவே, ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இந்த நேரத்தில் வெளியில் வரக்கூடாது என அறிவிக்க வேண்டும். ஊரடங்கில் தளர்வு மட்டும் அளிக்கப்பட்டு உள்ளது. முழுமையாக விலக்கி கொள்ளப்படவில்லை. இயல்பு நிலை திரும்பியது போல் வெளியில் காட்சி அளிக்கிறது. இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை என தெரிவித்தனர்.


latest tamil news
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், கோவிட் முதல் அலையின் போது போலீசார் கடுமையாக நடந்து கொண்டதால், சில இடங்களில் பிரச்னை ஏற்பட்டது. தற்போது, போலீசார் கனிவாக நடந்து கொள்வதை மக்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
10-ஜூன்-202104:24:29 IST Report Abuse
spr "தற்போது, போலீசார் கனிவாக நடந்து கொள்வதை மக்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்து கொள்கின்றனர்." இது உண்மையே . வேலையின்றி வெளியில் சுற்றுபவர்களை மட்டுமல்ல பிறரையும் காப்பாற்ற காவற்துறை கடுமையாக நடந்து கொண்டாலும் தவறில்லை அரசும் ரேஷன் பணப்பட்டுவாடா என்றெல்லாம் மக்களை வெளியே வர்க் சொல்லாமலிருந்தால் நல்லது அரசு நினைத்தால் பெரும்பாலோருக்கு வீட்டிலேயே இருந்து வருமானம் ஈட்ட வழி செய்ய முடியும் பல வழிகள் இருக்கிறது ஆனால் எந்த அரசுக்கும் மனமில்லை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் விற்கும் நேரத்தை நீட்டித்தால் மக்கள் கும்பலாக அடித்துப் பிடித்துக் கொண்டு வாங்குவது குறையும் அது தொடர்பான வழக்குகள் வந்தால் நீதிமன்றம் அந்த வழக்குகளை தள்ளி வைக்குமா இல்லையேல் இப்படி நானும் சொன்னேன் என்று கூறுவதில் பயனில்லை
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
10-ஜூன்-202102:44:39 IST Report Abuse
BASKAR TETCHANA இது எண்கள் ஆட்சி. இதில் யார் தலையிட கூடாது.எண்கள் தலைவரே சொல்கிறார் நாங்கள் அவரையே மதிப்பதில்லை. இதில் நீதி போலீஸ் நகராட்சி யார் தலை இட்டாலும் நாங்கள் சுற்றுவோம் கோரோனோவை பரப்புவோம் எண்கள் தலைவர் எங்களுக்கு பண உதவி செய்வார்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
09-ஜூன்-202123:28:33 IST Report Abuse
g.s,rajan India is a Democratic Country and it is not under Military rule Covid is not a Disease it is only a Deficiency. The bread winners has to go for outside to work to get some Income for themselves and for their families,Whether the Government Supports him by providing sufficient income to run their families,no they don't take any responsibility to do so???there is no use in simply criticizing them,life is nowadays becoming a heavy struggle to common man, it is not easy to survive. It is not true that they are loitering freely outside without any purpose,it is highly condemnable and Unaccep,if it worsens most people will be Mentally affected. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X