வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதை தவிர்த்து மற்றவை குறித்து பேச தயார்: வேளாண் அமைச்சர்

Updated : ஜூன் 09, 2021 | Added : ஜூன் 09, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதைத் தவிர்த்து மற்றவை குறித்து பேச அரசு தயாராகவுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 6 மாதங்களுக்கும் மேலாக டில்லி எல்லையில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது நாடு
Narendra Singh Tomar, FarmLaws, Farmers, ReadyToTalk, Centre, வேளாண் சட்டங்கள், நரேந்திர சிங் தோமர், வேளாண் அமைச்சர், பேச்சுவார்த்தை

புதுடில்லி: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதைத் தவிர்த்து மற்றவை குறித்து பேச அரசு தயாராகவுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 6 மாதங்களுக்கும் மேலாக டில்லி எல்லையில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது நாடு முழுவதும் கோவிட் 2ம் அலை பாதிப்புகள் கடுமையாக உள்ள சூழலிலும் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன், விவசாயிகள் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.


latest tamil news


இந்நிலையில், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு எப்போதும் பேசி வருகிறது. புதிய வேளாண் மசோதாக்களை திரும்பபெறும் கோரிக்கையை தவிர வேறு பிற சாத்தியகூறுகள் குறித்து விவாதிக்க விவசாய அமைப்புகள் பேச விரும்பினால் அவர்களுடன் பேச மத்திய அரசு தயாராக உள்ளது. மற்ற பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தையில் விவசாயிகள் முன்வைக்கலாம். மத்திய பிரதேச அரசு கோவிட் சூழலை சரியாக கையாளுகிறது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மாற்றப்படுவார் என்று வெளியாகும் தகவல் உண்மை இல்லை. பா.ஜ., முதல்வர் பற்றி பேச காங்கிரசுக்கு உரிமை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
09-ஜூன்-202121:44:52 IST Report Abuse
K.n. Dhasarathan பாவம் இந்த மன்னர், பி.ஜே.பி மன்னர்களில் இவரை போல ஆதரவற்றோர் யாருமில்லை, மக்கள் தான் இவருக்கு ஆதரவு தரவில்லை என்றால் இவரது சகாக்களும் கூட இவரை கண்டு கொள்ளவில்லை, தனியே புலம்பிக்கொண்டு உள்ளார் ஆனாலும் நம்ம வடிவேலு போல கெத்தாகத்தான் கம்பு சுத்துகிறார்.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
09-ஜூன்-202120:19:07 IST Report Abuse
jagan "விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்" - விவசாயிகள் இல்லை ப்ரோக்கர்கள் /கமிஷன் ஏஜெண்டுகள். தவறான வார்த்தை பிரயோகம்
Rate this:
Cancel
kattus - chennai,இந்தியா
09-ஜூன்-202119:59:34 IST Report Abuse
kattus அம்பி மணி மொதல்ல amethila ராவுல் கான் டெபாசிட் வாங்கட்டும் பார்க்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X