பொது செய்தி

இந்தியா

மும்பையில் கனமழை: ரயில் சேவை பாதிப்பு

Updated : ஜூன் 09, 2021 | Added : ஜூன் 09, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மும்பை: தென்மேற்கு பருவமழை காரணமாக, மும்பை மற்றும் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் உள்ளூர் ரயில் சேவை மற்றும் சாலை போக்குவரத்து முடங்கியது.கேரளாவில் கடந்த 3ம் தேதி தென் மேற்கு பருவமழை துவங்கியது. இது அதிவேகமாக முன்னேறி மஹாராஷ்டிரா மாநிலத்தை அடைந்துள்ளது. இதனால், மாநில தலைநகர் மும்பை மற்றும் பல இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை
Heavy Rain, Waterlogging, Mumbai,Monsoon,  Maharashtra, மும்பை, கனமழை,

மும்பை: தென்மேற்கு பருவமழை காரணமாக, மும்பை மற்றும் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் உள்ளூர் ரயில் சேவை மற்றும் சாலை போக்குவரத்து முடங்கியது.

கேரளாவில் கடந்த 3ம் தேதி தென் மேற்கு பருவமழை துவங்கியது. இது அதிவேகமாக முன்னேறி மஹாராஷ்டிரா மாநிலத்தை அடைந்துள்ளது. இதனால், மாநில தலைநகர் மும்பை மற்றும் பல இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்தது.


latest tamil news



இன்று காலை 8:30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மும்பை கொலபா பகுதியில் 77 மி.மீ., சான்டா குரூஸ் பகுதியில் 60 மி.மீ., மும்பையில் 48.49 மி.மீ., மும்பை கிழக்கு புறநகர் பகுதியில் 66.99 மி.மீ., மும்பை மேற்கு புறநகர் பகுதியில் 48.99 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.அதிகபட்சமாக பீலாப்பூர் பகுதியில் 168 மி.மீ., செம்பூரில் 125 மி.மீ., மும்பை மத்திய பகுதியில் 112 மி.மீ., வோர்லி மற்றும் மல்வானியில் தலா 105 மி.மீ., கந்திவிலி, பொரிவலி, மும்ப்ரா, போவாய் மற்றும் ஜூஹூ பகுதியில் 71 மி.மீ., முதல் 94 மி.மீ.,வரை மழை பதிவாகி உள்ளது.மழை காரணமாக மும்பையில், காந்தி மார்க்கெட், சியோன், மிலன் சுரங்கப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.


latest tamil news



இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பஸ் போக்குவரத்து வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டன.


latest tamil news



சிவாஜி மஹாராஜா டெர்மினலில் இருந்து குர்லா, தானே, வஷி இடையிலான உள்ளூர் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தண்ணீர் வடிந்த பிறகே அப்பகுதியில் ரயில் சேவை துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
10-ஜூன்-202121:10:09 IST Report Abuse
mathimandhiri மக்கள் பாடு மிகவும் பரிதாபமாக உள்ளது. இந்த மழையிலும், கொரோனா ஆபத்திலும் ரயில் ஓட்டுவதற்கு பணிக்கு வருகிறார்களே ரயில்வே ஊழியர்கள் அவர்களை கோவிலில் வைத்து கும்பிடணும்..
Rate this:
Cancel
Vagulabaranam - Mumbai,இந்தியா
09-ஜூன்-202115:14:32 IST Report Abuse
Vagulabaranam தென் மேற்கு பருவமழை தொடங்குவது அந்தமான் தீவுகளில் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X