135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில் 37வது திருமணம் செய்த தாத்தா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில் 37வது திருமணம் செய்த தாத்தா

Updated : ஜூன் 09, 2021 | Added : ஜூன் 09, 2021 | கருத்துகள் (49)
Share
கோஹிமா: முதியவர் ஒருவர், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள், 28 மனைவிகள் முன்னிலையில், 37வது திருமணம் செய்துள்ளது வைரலாகியுள்ளது.பழங்காலத்தில் ராஜாக்கள் அதிகமான மனைவிகளை கட்டிக்கொண்டு, பல குழந்தைகளை பெற்றெடுத்ததாக கதைகளில் படித்திருப்போம். அதெல்லாம் இப்போது சாத்தியமா என்றால், நிச்சயம் இல்லை. இப்போதுள்ள பொருளாதார நிலையில், ஒரு மனைவியை வைத்தே குடும்பத்தை நடத்துவது
37thTime, Married, InFrontofWives, Children

கோஹிமா: முதியவர் ஒருவர், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள், 28 மனைவிகள் முன்னிலையில், 37வது திருமணம் செய்துள்ளது வைரலாகியுள்ளது.

பழங்காலத்தில் ராஜாக்கள் அதிகமான மனைவிகளை கட்டிக்கொண்டு, பல குழந்தைகளை பெற்றெடுத்ததாக கதைகளில் படித்திருப்போம். அதெல்லாம் இப்போது சாத்தியமா என்றால், நிச்சயம் இல்லை. இப்போதுள்ள பொருளாதார நிலையில், ஒரு மனைவியை வைத்தே குடும்பத்தை நடத்துவது பலருக்கும் பெரும் சாதனையாக இருக்கிறது. அப்படி இருக்கையில், 36 மனைவிகளை திருமணம் செய்துவிட்டு, தற்போது 37வது திருமணத்தையும் செய்துள்ளார். அதுவும், தற்போது உயிருடன் உள்ள 28 மனைவிகள் முன்னிலையிலேயே என்றால் நம்ப முடிகிறதா?


latest tamil news


ஆம், 28 மனைவிகள், 135 குழந்தைகள் மற்றும் 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில், 37வது திருமணமாக இளம்பெண் ஒருவரை மணந்துள்ளார், ஒரு முதியவர். இது குறித்த வீடியோ ஒன்றை, நாகாலாந்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ருபின் ஷர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‛தைரியமான மனிதர், 37வது திருமணம் அதுவும் 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில்' என குறிப்பிட்டுள்ளார். ஜூன் 6ம் தேதி பகிர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X