பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூன் 11ல் காங்., போராட்டம்

Updated : ஜூன் 09, 2021 | Added : ஜூன் 09, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூன் 11-ல் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டில்லி, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பெட்ரோல் விலை
Petrol, Diesel, Congress, Nationwide, Protest,

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூன் 11-ல் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டில்லி, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டியது. தமிழகத்திலும் இன்னும் சில நாட்களில் 100 ரூபாயை தொட்டுவிடும்.

இதற்கிடையே கோவிட் ஊரடங்கு காரணமாக மக்கள் சிரமப்படும் சூழலில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்களை மேலும் சிரமத்திற்கு தள்ளிவிடுகிறது. மேலும், எரிப்பொருட்கள் விலை உயர்வால், அத்தியாவசிய பொருள்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து வருகிறது.


latest tamil news


இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளை மறுநாள் (ஜூன் 11) காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதொடர்பாக காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் தொடர் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் நிலையங்களுக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 11) காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sams - tirunelveli,ஐக்கிய அரபு நாடுகள்
10-ஜூன்-202112:34:54 IST Report Abuse
sams Govt employees and teachers got full salary without any work in this Corona period.why govt not reduce their salary to 50%.and then reduce petrol rate for Inthe range of 65 to 70 rs.70 %of tax income from this tax income going as salary for the corrupted govt employees
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
10-ஜூன்-202106:18:08 IST Report Abuse
GANESUN 70 வருஷமா புடிச்சிருந்ததிலிருந்து கடந்த 7 அரை வருஷத்தில் கொஞ்சம் கொஞ்சமாக விடிவு பிறந்திருக்கு.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-ஜூன்-202122:39:32 IST Report Abuse
Pugazh V உலக அரசியல் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்றது யாரு???? பேரில்லாத கொக்கி. அதோட குமாரு. இதோட வீடு எங்கே??கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ். ஹா ஹா ஹா ஹா.....பன்னிக்குட்டிங்கலாம் பன்ச் டயலாக் பேசுதுங்ஙளே என்று சந்தானம் சொன்ன காமெடி தான் நினைவுக்கு வருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X