சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள்

Added : ஜூன் 09, 2021
Share
Advertisement
ஒரு மனித உடலில் பல கோடி கிருமிகள் உயிர் வாழ்கின்றன. இவற்றில், பேக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சைகள் என பல நுண்ணுயிரிகள் குடியிருக்கின்றன. இவை தான் ஒருவரின் உடலின் பொதுவான தன்மையை, நோய் எதிர்ப்பு திறனை, உணவு செரிமானத்தை, ஏன் உடல் நலனை, மன நலனையே அவை தீர்மானிக்கின்றன. எனவே, ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தனித்த தன்மையுள்ள கிருமிகள் உலகம் ஒன்று இயங்குகிறது.அதேபோல, பல லட்சம்
 ஒவ்வொரு மனித உடலில் பல கோடி கிருமிகள்

ஒரு மனித உடலில் பல கோடி கிருமிகள் உயிர் வாழ்கின்றன. இவற்றில், பேக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சைகள் என பல நுண்ணுயிரிகள் குடியிருக்கின்றன. இவை தான் ஒருவரின் உடலின் பொதுவான தன்மையை, நோய் எதிர்ப்பு திறனை, உணவு செரிமானத்தை, ஏன் உடல் நலனை, மன நலனையே அவை தீர்மானிக்கின்றன. எனவே, ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தனித்த தன்மையுள்ள கிருமிகள் உலகம் ஒன்று இயங்குகிறது.

அதேபோல, பல லட்சம் மனிதர்கள் வாழும் ஒரு நகரத்தில், காற்று, நீர், பொதுப் பரப்புகள் என்று வெளியிலும் கிருமிகள் வாழ்கின்றன. இவற்றிலும், ஒவ்வொரு நகருக்கும் தனித் தன்மை கொண்ட கிருமிகள் உலவுவதாக, 'செல்' என்ற ஆய்விதழில் வெளியான ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வுக்காக, ஆறு கண்டங்களில் உள்ள, 32 நாடுகளில் இருக்கும், 60 நகரங்களில் இருந்து, நுண்ணுயிரிகள் சேகரிக்கப்பட்டன. கடந்த, 2015 முதல் 2017 வரையிலான மூன்று ஆண்டுகள் நடந்த இந்த சேகரிப்பில் பொது போக்குவரத்து, மருத்துவமனைகள் என பொது வெளியிலிருந்து கிடைத்த கிருமி மாதிரிகள் இடம்பெற்றன.

இறுதியில், பல நகரங்களில் 32 வகை கிருமிகள் பொதுவாக காணப்பட்டாலும், மிகச் சிறிய அளவில் புதிய வகை கிருமிகளும் இருப்பது அந்த ஆய்வில் தெரியவந்தது. இந்த கிருமிகள் தான் அந்தந்த நகரின் கிருமி உலகிற்கு தனித்தன்மையை தருவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஒருவர் தன் காலணியைத் தந்தால், அவர் எந்த நகரிலிருந்து வருகிறார் என்பதை துல்லியமாகச் சொல்ல முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X