பொது செய்தி

தமிழ்நாடு

சொன்னதை செய்யுங்கள்: முருகன் வலியுறுத்தல்

Added : ஜூன் 09, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை:''பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்குதல், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு ஆகிய தேர்தல் வாக்குறுதிகளை, தி.மு.க., அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.தமிழக பா.ஜ., விவசாய அணி சார்பில், முன்கள பணியாளர்களுக்கு 1 லட்சம் முக கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடந்தது. முக கவசங்களை வழங்கிய பின்
 சொன்னதை செய்யுங்கள்: முருகன் வலியுறுத்தல்

சென்னை:''பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்குதல், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு ஆகிய தேர்தல் வாக்குறுதிகளை, தி.மு.க., அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.

தமிழக பா.ஜ., விவசாய அணி சார்பில், முன்கள பணியாளர்களுக்கு 1 லட்சம் முக கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடந்தது. முக கவசங்களை வழங்கிய பின் முருகன் கூறியதாவது:மத்திய அரசின் ஏழு ஆண்டு சாதனைகளை, மக்களிடம் எடுத்து கூறி வருகிறோம். தமிழகம் முழுதும் உள்ள 12 ஆயிரம் கிராமங்களில், பா.ஜ., சார்பில் இலவச மளிகை பொருட்கள், முக கவசம், கிருமி நாசினி போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தி.மு.க., தலைமையிலான அரசு அமைந்து 30 நாட்கள் நிறைவடைந்துள்ளன. அக்கட்சியின் பிரதான தேர்தல் வாக்குறுதியான, பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை இன்னும் துவங்கவில்லை.அத்திட்டத்தையும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியையும், தி.மு.க., அரசு உடனே துவங்க வேண்டும்.

அரசு நுாலகங்களுக்கு 'முரசொலி' நாளிதழ் வாங்க முடிவு செய்திருப்பது, தி.மு.க.,வின் அதிகார துஷ்பிரயோகத்தை காட்டுகிறது. ஹிந்து சமய அறிநிலையத் துறை, சொத்து ஆவணங்களை கணினியில் பதிவேற்றம் செய்வதில் பாரபட்சம் காட்டக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
10-ஜூன்-202122:00:12 IST Report Abuse
K.n. Dhasarathan முருகா ஒரு பதினைந்து லட்சம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாங்கி கணக்கில் போடப்படும் என்று சொன்ன பிரதமர் இப்போது அதைப்பற்றி வாயை திறப்பதே இல்லையே, சொல்லி பல வருடங்கள் ஆகிறதே, ஒருவேளை மறந்து இருப்பாரோ ? கொஞ்சம் ஞாபக படுத்தின நல்ல இருக்கும், தி மு க வாக்குறுதி பற்றி ரொம்ப கவலை படாதீங்கோ, ஒரு மாதம் தானே ஆகிறது, விரைவில் செய்வார்கள், கவலைப்பட்டு உடம்பை கெடுத்துக்கொள்ளாதீர்கள் .
Rate this:
Cancel
வணங்காமுடி திராவிடன் - அஞ்சாமை திராவிடர் உடமையடா ,இந்தியா
10-ஜூன்-202121:00:28 IST Report Abuse
வணங்காமுடி திராவிடன் ஒரு நா தாரி 15 லட்சம் என்றும் , ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்று சொன்னான் அவனை கேட்டிய நீ
Rate this:
Cancel
S.Aruna - Trichy,இந்தியா
10-ஜூன்-202120:29:06 IST Report Abuse
S.Aruna இன்னும் சட்டமன்றம் கூடவில்லை கவர்னர் அறிக்கை வாசிக்கவில்லை. அடிப்படை புரிதலின்றி எப்படி பேசுகிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X