எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினின் முதல் டில்லி பயணம்: பரிசீலிக்கும் பிரதமர் அலுவலகம்

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 09, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
பிரதமர் மோடியுடனான, மஹாராஷ்டிர முதல்வரின் சந்திப்பு முடிந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க நேரம் ஒதுக்குவது குறித்து பிரதமர் அலுவலகம் தீவிர பரிசீலனையில் உள்ளதால், மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தேர்தல் முடிந்து பதவியேற்ற சில நாட்களிலேயே, மாநில முதல்வர்கள், டில்லி பயணம் மேற்கொள்வது வழக்கம். பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்து, மாநில நலன்
CM Stalin, Stalin, PMO, MK Stalin, PM Modi, ஸ்டாலின் ,டில்லி பயணம், பிரதமர் அலுவலகம்

பிரதமர் மோடியுடனான, மஹாராஷ்டிர முதல்வரின் சந்திப்பு முடிந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க நேரம் ஒதுக்குவது குறித்து பிரதமர் அலுவலகம் தீவிர பரிசீலனையில் உள்ளதால், மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தேர்தல் முடிந்து பதவியேற்ற சில நாட்களிலேயே, மாநில முதல்வர்கள், டில்லி பயணம் மேற்கொள்வது வழக்கம். பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்து, மாநில நலன் சார்ந்த கோரிக்கை மனுக்களை அளிப்பார்கள்.


எதிர்பார்ப்பு


அதன்படி, தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே, அவர், பிரதமர் மோடியை எப்போது சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு, டில்லியில் நிலவி வருகிறது.ஆனால், ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற நாள் முதல், கொரோனா பரவலின் தீவிரம் பெரும் சவாலாக மாறியதால், தடுப்பு நடவடிக்கைகளில் அவரின் கவனம் திரும்பியது.

கடந்த இரு மாதங்களாக, டில்லியிலும் அசாதாரண சூழ்நிலை நிலவிய தால், சந்திப்புக்கு நேரம் கேட்டு யார் விண்ணப்பித்தாலும், ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்களின் அலுவலங்களால், அவற்றை பரிசீலிக்கஇயலவில்லை.தற்போது, டில்லியில் சூழல் மாறியுள்ளதால், நேற்று முன்தினம், மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு, அவர் பிரதமர் மோடியை சந்தித்தார்.

தமிழக அரசின் சார்பிலும் பிரதமர் அலுவலகத்தில் நேரம் ஒதுக்கும்படி ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்டாலினின் டில்லி வருகைக்காக, வரும் 14, 15 மற்றும் 16 தேதிகளை, பிரதமர் அலுவலக அதிகாரிகள், பரிசீலித்து வருகின்றனர்.
தகவல்


இதில், கடைசி நேர மாறுதல் ஏதும் இல்லாவிடில், மூன்றில் ஏதேனும் ஒரு நாளில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு நடைபெறும்.இந்த நாட்களில் வேறு அலுவல்கள் குறுக்கிடும் நிலையில், வரும் 26 அல்லது 27 தேதியில், பிரதமரை தமிழக முதல்வர் சந்திப்பார்.அப்போது, தமிழக நலத்திட்டங்களுக்கான கோரிக்கை மனுவை, ஸ்டாலின், பிரதமரிடம் அளிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பதவியேற்ற பின், முதன்முறையாக டில்லி வரும் முதல்வர், ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள் என, யாரையும் சந்திக்காமல், பிரதமரை மட்டுமே சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. இதனால், டில்லி பயணத்தை ஒரே நாளில் முடித்துக் கொண்டு, முதல்வர் ஸ்டாலின் சென்னை புறப்படுவார் என, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
10-ஜூன்-202121:06:34 IST Report Abuse
அசோக்ராஜ் திருக்குறள் ... ஓ மை டியர் .... அதுதான் கதி கலங்குது. வாட் வில் ஐ ரிப்ளை? அந்த நிதி அமைச்சர் வேறு கூடவே இருந்துவிட்டால் இன்னும் மோசமாயிடுமே? புறநானூறு அகநானூறு .... ஐயோ இயற்கையே காப்பாற்று.
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
10-ஜூன்-202117:21:49 IST Report Abuse
rajan பிரதமர் அலுவலகத்தைப் பார்த்து அசந்து விடுவார். நம்மோட அலுவலகத்தையும் இது போல் மாற்றனும் .....😎
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-ஜூன்-202116:57:38 IST Report Abuse
Pugazh V பிரதமர் என்ன கேட்டாலும் சர்ர்ரியான பதில் தரப்படும்
Rate this:
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
14-ஜூன்-202117:25:18 IST Report Abuse
Palanisamy Sekar ஆமாம் டெவெலப்மென்ட் டெவெலப்மென்ட் டெவெலப்மென்ட்..அட எப்படி இருக்கீங்கன்னு ஆங்கிலத்தில் கேட்டால் கூட இதே பதிலனா பாருங்களேன்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X