பொது செய்தி

தமிழ்நாடு

விதை நிலையங்களில் ஆய்வு

Added : ஜூன் 09, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு-சேத்தியாத்தோப்பு, புவனகிரி, கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில் வட்டாரங்களில் கடலுார் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சோமு ஆய்வு செய்தார்.சேத்தியாத்தோப்பு, கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறுகையில், ஊரடங்கு

சேத்தியாத்தோப்பு-சேத்தியாத்தோப்பு, புவனகிரி, கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில் வட்டாரங்களில் கடலுார் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சோமு ஆய்வு செய்தார்.சேத்தியாத்தோப்பு, கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறுகையில், ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து விதை ஆய்வு கண்காணிப்பு மேற்கொண்டு விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்து கடந்த 2 மாதங்களிலிருந்து தற்போது வரை 268 விதை மாதிரிகள் எடுத்து தர ஆய்விற்கு கடலுார் விதைப்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பியுள்ளோம்.தனியார் விதை விற்பனை நிலையங்களில் நெல், வீரிய ஒட்டு கம்பு, மக்காச்சோளம், விதைக்குவியல் , சுமார் 3.5 லட்சம் மதிப்புடைய 5 டன் விதைகள் ஆய்வில் குறைபாடு கண்டறிந்து விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.மானாவாரி கம்பு, விதைப்பு மேற்கொள்ளும் விவசாயிகள் கோடை உழவு செய்த பின்பு மக்கிய தொழு எரு ஏக்கருக்கு 4 டன் தெளிக்க வேண்டும். பின் உழவு செய்து விட்டு விதைக் கம்பை 2 மணி நேரம் ஊர வைத்து நல்ல ஈரப்பதத்தில் விதைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.கடலுார் விதை ஆய்வாளர் தமிழ்வேல் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X