பொது செய்தி

தமிழ்நாடு

2 கன்று குட்டிகளை விற்று கொரோனா நிதி வழங்கிய மாற்றுத்திறனாளி

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தஞ்சாவூர் : பார்வை குறைபாடுடைய மாற்றுத் திறனாளி, தன் மகனின் படிப்புக்காக வளர்த்த, இரண்டு கன்று குட்டிகளை விற்று, கொரோனா நிவாரண நிதி வழங்கினார்.தஞ்சாவூர் மாவட்டம், ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 52. பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி. இவரது மனைவி மகேஷ்வரி, 42.இவர்களுக்கு, கல்லுாரியில் படிக்கும் பிரசாந்த், 20, பிளஸ் 2 முடித்துள்ள சஞ்சய், 17 என இரண்டு
 2 கன்று குட்டிகள், கொரோனா, நிதி  வழங்கியவர்


தஞ்சாவூர் : பார்வை குறைபாடுடைய மாற்றுத் திறனாளி, தன் மகனின் படிப்புக்காக வளர்த்த, இரண்டு கன்று குட்டிகளை விற்று, கொரோனா நிவாரண நிதி வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம், ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 52. பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி. இவரது மனைவி மகேஷ்வரி, 42.
இவர்களுக்கு, கல்லுாரியில் படிக்கும் பிரசாந்த், 20, பிளஸ் 2 முடித்துள்ள சஞ்சய், 17 என இரண்டு மகன்கள் உள்ளனர். ரவிச்சந்திரன், 100 நாள் வேலை செய்தும், மாற்றுத் திறனாளி உதவித்தொகையிலும், குடும்பத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தன் இளைய மகனை கல்லுாரியில் சேர்க்க, இரண்டு கன்றுக்குட்டிகளை வளர்த்தார். அதை, 6,000 ரூபாய்க்கு விற்று, முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக, தஞ்சை கலெக்டர் கோவிந்தராவிடம் நேற்று வழங்கினார். ரவிச்சந்திரன் கூறியதாவது:
நான் பி.எஸ்.சி., - பி.எட்., படித்து, தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தேன். 20 ஆண்டுகளுக்கு முன், பார்வையில் கோளாறு ஏற்பட்டது. கொரோனா நிவாரண நிதி வழங்க கையில் பணம் இல்லை. மகன் படிப்பு செலவுக்கு விற்கலாம் என வைத்திருந்த, இரு கன்றுக்குட்டிகளை விற்று நிதி வழங்கினேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
10-ஜூன்-202112:00:23 IST Report Abuse
rajan அரசிடம் பணமா இல்லை?
Rate this:
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
10-ஜூன்-202106:31:52 IST Report Abuse
S.kausalya இவர் எதற்காக இப்படி செய்ய வேண்டும். பணம் உள்ளவர்களுக்கு மனம் இருப்பதில்லை. கஷ்டப்பட்டு சம்பாதித்து பணத்தை நிவாரண நிதிக்கு கொடுக்க வேண்டாம். ஒரு வேலையும் செய்யாமல் , கட்ட பஞ்சாயத்து, ஊழல் செய்து கொள்ளை அடித்து ஏழு தலைமுறைக்கு மேல் பணம் சேர்த்து வைத்து.உள்ள அரசியல் வாதிகள் கொடுக்கலாம். தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு தேவையானவற்றை ஏன் இவர் கொடுக்க வேண்டும். இவருக்கு தேவைப்படும்போது அரசு பிரத்யேகமாக வந்து இவருக்கு உதவ போகிறதா? இவரின் சுற்றம் கூட அந்த சூழ்நிலையில் அப்படி தான் கேட்க்கும். இவர் தனக்காக ஒரு மாற்று திறனாளி சான்று கேட்டால் கூட லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும். எதற்காக இவர் இப்படி செய்கிறார் தெரியவில்லை? Vilambarathirkaagavaa?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X