பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: ஆட்சிக்கு தேவை புதிய சிந்தனை!

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (59)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:இதிஹாசமயம் சீதாராமன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:கொரோனாவை கையாளுவதில், தமிழக அரசு காட்டும் ஆர்வம் பாராட்டத்தக்கது. ஆனால், மற்ற செயல்பாடுகள் பாராட்டும்படி இல்லையே!மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என அழைக்க வேண்டுமாம். தமிழை, மத்திய ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுமாம்.
ithu, ungal, idam, இது, உங்கள், இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:



இதிஹாசமயம் சீதாராமன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

கொரோனாவை கையாளுவதில், தமிழக அரசு காட்டும் ஆர்வம் பாராட்டத்தக்கது. ஆனால், மற்ற செயல்பாடுகள் பாராட்டும்படி இல்லையே!மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என அழைக்க வேண்டுமாம். தமிழை, மத்திய ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுமாம். இதெல்லாம் இன்றைய சூழலில் தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கும் செயல்கள்.

வரிப்பணத்தை, ரேஷன் கடைவழியாக மக்களுக்கு வாரி வழங்குவது, ஆளுங்கட்சியின் சாதனை அல்ல. திராவிட ஆட்சியாளர்கள் யார் வந்தாலும், செய்யும் காரியம் தான்.புதிய ஆட்சியாளர்களிடம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்றவற்றை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கோவில் சொத்தை எடுத்து, தவறாக பிரயோகம் செய்வது; ஹிந்திக்கு எதிராக செயல்படுவது போன்றவற்றை, மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

தமிழகத்தில், ஹிந்தி நுழைய கூடாது என்றால், தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளில் இருந்து, முதலில் ஹிந்தியை அகற்ற வேண்டும். ஆளுங்கட்சியினர் அதற்காக போராட்டம் நடத்துவரா?தமிழகத்தில் உள்ள மது உற்பத்தி ஆலைகள் யாருக்கு சொந்தமானவை என, மக்களுக்கு தெரியும். அதை யாரும் பேச மாட்டார்கள்.ஹிந்துவிற்கு எதிராக, மீண்டும் போலி நாத்திக கும்பல்கள் தலைதுாக்க துவங்கியுள்ளன. அவர்களால், ஆட்சிக்கு அவப்பெயரே உண்டாகும்.எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறும் போக்கை, தி.மு.க., அரசு கைவிட வேண்டும். அதனால், தமிழகத்திற்கு பாதகமே தவிர, வேறு எந்த பலனும் இல்லை.


latest tamil news


தி.மு.க., எதிர்க்கும் திட்டம், நிச்சயம் மக்களுக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும் என்ற எண்ணம் மக்களிடம் வர வேண்டும். இதை தி.மு.க., புரிந்து, திருத்தி கொள்ள வேண்டும்.பழைய திராவிட குப்பையை கிளராமல், புதிய சிந்தனையுடன் ஆட்சி நடத்த வேண்டும்.கட்சிக்காரர்களை, கலகக்காரர்களை, குடும்பத்தினரை, நிர்வாகத்தில் தலையிடாமல் கட்டுப்படுத்தினாலே போதும், துாய்மையான ஆட்சியை கொடுக்க முடியும்.


Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
11-ஜூன்-202114:04:55 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN டுமீல் நாட்டு வாக்காளர்கள் அதிமுக அரசிடம் சலித்துப்போனதால் டீம்காவை தேர்ந்தெடுத்துள்ளனர் அது எவ்வளவு பெரிய தவறு என்பதை ஏற்கனவே உணர்ந்திருப்பார்கள் இனி தலையில் அடித்துக்கொண்டாலும் பயனில்லை இரண்டாயிரம் ரூபாய் காசுக்காக எதிர்காலத்தையே தொலைத்துவிட்டு நிற்கிறார்கள்
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
11-ஜூன்-202114:00:29 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN வடபழனி கோவில் நிலம் மீட்கப்பட்டது ஹிந்துக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக இனிமேதான் "அடிச்சு" ஆடுவாங்க ஹிந்துக்களே ரெடியா இருங்க "வாங்கி"க் கொள்ள
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
11-ஜூன்-202113:51:36 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN திமுக உருவாக்கப்பட்டதே குறுகிய சிந்தனைகளை கொள்கைகளாக வைத்துத்தான் இதை மறுப்பவர்கள் கழக வரலாறு அறியாதவர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X