மெஹுல் சோக்சிக்கு ஜாமின் கிடைக்குமா?

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
ரோசவ்; டொமினிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள மெஹுல் சோக்சிக்கு, ஜாமின் கிடைக்குமா என்பது நாளை தெரியும்.கடந்த 2018ல், மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி மெஹுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, வட அமெரிக்க நாடான ஆன்டிகுவாவுக்கு தப்பிச் சென்றார். அங்கு வசித்து வந்த சோக்சி, கடந்த மே 23ல் திடீரென மாயமானார்.இந்நிலையில், ஆன்டிகுவா அருகே உள்

ரோசவ்; டொமினிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள மெஹுல் சோக்சிக்கு, ஜாமின் கிடைக்குமா என்பது நாளை தெரியும்.கடந்த 2018ல், மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி மெஹுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, வட அமெரிக்க நாடான ஆன்டிகுவாவுக்கு தப்பிச் சென்றார். அங்கு வசித்து வந்த சோக்சி, கடந்த மே 23ல் திடீரென மாயமானார்.



latest tamil news


இந்நிலையில், ஆன்டிகுவா அருகே உள் டொமினிக்கா தீவில், போலீசார், சோக்சியை கைது செய்தனர். அவர், கியூபாவுக்கு தப்பியோடும் திட்டத்துடன், டொமினிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்ததாக, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதையடுத்து, சோக்சி சார்பில் அவரது வழக்கறிஞர்கள், டொமினிக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.


latest tamil news


இந்த மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நேற்று டொமினிக்கா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஜாமின் வழங்கினால், சோக்சி தப்பியோடி விடுவார்' என, அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதை, சோக்சி வழக்கறிஞர் மறுத்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விசாரணையை, 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்படி நாளை, சோக்சிக்கு ஜாமின் கிடைக்குமா, இல்லையா என்பது தெரியவரும்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil - chennai,இந்தியா
10-ஜூன்-202112:25:14 IST Report Abuse
Tamil திருடிட்டு போனவர்கள் அடைக்கலம் கொடுக்க எவ்வளவு நாடுகள் உள்ளது அதில் முக்கியமானது london england. உலகத்தில் உள்ள அணைத்து அயோக்கியன் திருடன் தீவிரவாதி அனைவர்க்கும் அடைக்கலம் பணம் கொடுத்தா போதும், இதுல பெருமை வேற
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
10-ஜூன்-202112:16:16 IST Report Abuse
duruvasar ஜாமீனு, கெண்டை மீனு இதல்லாம் வாங்கி தருவது மதுரைக்கு பக்கத்து மாவட்டம் சிவகங்கை மாவட்ட காரர் கையில இருக்கு.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
10-ஜூன்-202110:57:07 IST Report Abuse
duruvasar பாசி, கோசி, ராசி என எல்லா கிரிமினல்களும் ஜாமினில் சுதந்திரமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X