தமிழ்நாடு

போராடுது ஊரு... போதை வியாபாரம் ஜோரு! அடங்காத கஞ்சா, போலி மது விற்பனை ...... இளைஞர்கள் பலர் போதைக்கு அடிமை

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
கொரோனா ஊரடங்கில் மதுக்கடைகள் மூடியிருப்பதால், கோவையில் கஞ்சா மற்றும் போலி மது வகைகள் விற்பனை, அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.ஊரடங்கால் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தாலும், நகருக்குள்ளும், புறநகரப் பகுதிகளிலும் சரக்கு விற்பனை, கனஜோராக நடந்து வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக, போலி மது வகைகளுடன் கஞ்சா விற்பனையும் அதிகரித்து வருவதாக,
 போராடுது ஊரு... போதை வியாபாரம் ஜோரு!  அடங்காத கஞ்சா, போலி மது விற்பனை ...... இளைஞர்கள் பலர் போதைக்கு அடிமை

கொரோனா ஊரடங்கில் மதுக்கடைகள் மூடியிருப்பதால், கோவையில் கஞ்சா மற்றும் போலி மது வகைகள் விற்பனை, அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.ஊரடங்கால் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தாலும், நகருக்குள்ளும், புறநகரப் பகுதிகளிலும் சரக்கு விற்பனை, கனஜோராக நடந்து வருகிறது.

இதில் கடந்த சில நாட்களாக, போலி மது வகைகளுடன் கஞ்சா விற்பனையும் அதிகரித்து வருவதாக, பொதுமக்களிடமிருந்து புகார்கள் குவிகின்றன. குறிப்பாக, கோவை நகரை ஒட்டியுள்ள ஊரகப் பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைப் புழக்கமும், அதிகரித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட சில பகுதிகளில், கல்லுாரி மாணவர்கள் என்ற பெயரில் தங்கியுள்ள சில கேரள இளைஞர்கள், இது போன்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக, அங்குள்ள மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இவர்களால், கல்லுாரி வயதுள்ள இளைஞர்கள் பலரும் கஞ்சாவுக்கு அடிமையாகி வருவதாக கூறும் பெற்றோர், இந்த ஸ்டேஷன் எல்லையில், கஞ்சா விற்பனை செய்வோர் குறித்து, உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கொதிக்கின்றனர். கோவை நகரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஆபரேஷனுக்குப் பயன்படுத்தப்படும் மயக்க மருந்து ஊசியைத் திருடி, போதை மருந்தாக மாற்றி விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, பலரும் கைது செய்யப்பட்டனர்.அதேபோன்று, இப்போது கஞ்சா மற்றும் போதை மாத்திரைப் பயன்பாடு அதிகரித்துள்ளதாக, டாக்டர்கள் தகவல் கூறுகின்றனர்.

அரசு பாலிடெக்னிக் ஒன்றில், நன்றாகப் படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவன், கஞ்சாவுக்கு அடிமையாகி, படிப்பையே இழந்து நிற்பதாக, அந்த இளைஞனின் குடும்பத்தினர் கண்ணீர் வடிக்கின்றனர்.துடியலுார், வடவள்ளி, சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பல பகுதிகளிலும், கஞ்சா விற்பனை கனஜோராக நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.கடந்த ஒரு வாரத்தில் மட்டும், பீளமேடு, சரவணம்பட்டி, ரத்தினபுரி பகுதிகளில் கஞ்சா விற்ற எட்டு பேர், கோவை மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூரல் போலீசாரிடம், 10க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 20 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

உண்மையில், கோவையில் புழங்குவதில் இது ஒரு துளி என்றே பலரும் சுட்டிக்காட்டு கின்றனர். எனவே, கோவை மாநகர போலீசாரின் ஒத்துழைப்புடன், கஞ்சா வியாபாரிகளை வேட்டையாட வேண்டிய அதிகப் பொறுப்பு, ரூரல் போலீசாருக்கே உள்ளது.இதைச் செய்யாவிடில், ஓர்இளம் தலைமுறை போதைக்கு அடிமையாகி, கண் முன்னே அழிவதைத் தடுக்கவே முடியாது.'தனிப்படை அமைப்போம்!'கோவை ரூரல் எஸ்.பி., செல்வ நாகரத்தினத்திடம் கேட்டபோது, ''எந்தெந்தப் பகுதிகளில் இவ்வாறு கஞ்சா விற்பனை நடக்கிறது என்று, குறிப்பிட்டுப் புகார் செய்தால் உடனே ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூரல் பகுதிகளில் கஞ்சா விற்பனையைத் தடுக்க, விரைவில் தனிப்படை அமைக்கப்படும். கஞ்சா விற்பனைக்கு யார் உதவியாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X