பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் நிற்காத கோவை ரயில்; இரவில் பயணிகள் தவிப்பு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சிவகங்கை : கோவை ராமேஸ்வரம் ரயில் சிவகங்கையில் நின்று செல்ல மக்கள் பிரதிநிதிகள் ரயில்வே நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.கோயம்புத்துாரில் இருந்து திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் அதிகளவில் சிவகங்கை பயணிகள் வருகின்றனர். செவ்வாய் அன்று

சிவகங்கை : கோவை ராமேஸ்வரம் ரயில் சிவகங்கையில் நின்று செல்ல மக்கள் பிரதிநிதிகள் ரயில்வே நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

கோயம்புத்துாரில் இருந்து திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் அதிகளவில் சிவகங்கை பயணிகள் வருகின்றனர். செவ்வாய் அன்று இரவு 10:00 மணிக்கு கோயம்புத்துாரில் புறப்படும் ரயில், புதனன்று அதிகாலை 2:30 மணிக்கு சிவகங்கை வரும்.மாவட்ட தலைநகரான சிவகங்கையில் நிற்காமல் காரைக்குடி, மானாமதுரையில் மட்டுமே நின்று செல்கிறது. இந்த ரயிலில் வரும் சிவகங்கை பயணிகள் அதிகாலை 3:00 மணிக்கு மானாமதுரை ஸ்டேஷனில் இறங்கி, விடியும் வரை காத்திருந்து, பஸ்சில் சிவகங்கை வரவேண்டிய நிலை உள்ளது.

புதனன்று இரவு 7:25 மணிக்கு ராமேஸ்வரத்தில் புறப்படும் இந்த ரயில் சிவகங்கையில் நின்று செல்ல அனுமதிக்கின்றனர். சிவகங்கை தொகுதி எம்.பி., கார்த்தி, எம்.எல்.ஏ., செந்தில்நாதன் ஆகியோர் ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி, இரு வழித்தடத்திலும் கோயம்புத்துார் - ராமேஸ்வரம் ரயில் சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது, சிவகங்கையில் இருந்து கோயம்புத்துார் செல்லும் ரயிலில் பயணிகள் வரத்து அதிகமாக உள்ளது. ஆனால், கோயம்புத்துாரில் இருந்து ராமேஸ்வரம் வரும் போது சிவகங்கைக்கு பயணிகள் கூட்டமே இல்லை. இதனால், நிற்காமல் செல்ல அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X