திருப்பூர், : 'ஆன்லைன்' வாயிலாக, மனுக்களை பெற்று, ஜூன் 4வது வாரம் ஜமாபந்தி நடத்துமாறு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூலை முதல், அடுத்த ஆண்டு ஜூன் வரையிலான காலம், பசலி ஆண்டு எனப்படும். பயிர் சாகுபடி, நிலவரி வருவாய், அடங்கல் (சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு) உட்பட, வருவாய் கிராமங்களில் பராமரிக்கப்படும், 21 வகை பதிவேடு கணக்கு விவரங்களுக்கு, ஆண்டுதோறும் நடைபெறும் ஜமாபந்தியில் ஒப்புதல் அளிக்கப்படும்.2020-21ம் ஆண்டுக்கான (வருவாய் பசலி ஆண்டு 1430) ஜமாபந்தி, இம்மாதம் நான்காவது வாரம் நடத்தப்பட வேண்டுமென, அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பதால், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஜமாபந்தி நிகழ்வுகளை அரசிதழில் வெளியிட வேண்டும். பொதுமக்கள் கூட்டம் சேராதபடி, 'ஆன்லைன்' வாயிலாக கோரிக்கை மனு மற்றும் விண்ணப்ப படிவங்களை பெற வேண்டும். அதற்காக, 'இ-சேவை' மையங்களை தயார்படுத்த வேண்டும்.தாலுகாவுக்கான ஜமாபந்தி அலுவலர் நியமனம், ஜமாபந்தி அரசிதழ் வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ளன' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE