அரசியல் செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி போட்டு கொள்ளுங்க! ஊரக வளர்ச்சி அமைச்சர் அறிவுரை

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சூலுார்:''கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்,'' என, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.கோவை மாவட்டம், சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிட்டாம்பாளையம் ஊராட்சியில், 50 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள, கொரோனா தொற்று சிகிச்சை மையத்தை அமைச்சர் பெரிய கருப்பன் நேற்று ஆய்வு செய்தார். சிகிச்சை

சூலுார்:''கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்,'' என, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.கோவை மாவட்டம், சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிட்டாம்பாளையம் ஊராட்சியில், 50 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள, கொரோனா தொற்று சிகிச்சை மையத்தை அமைச்சர் பெரிய கருப்பன் நேற்று ஆய்வு செய்தார். சிகிச்சை வசதிகள் குறித்து துறை அதிகாரிகள் மற்றும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
சிகிச்சையில் உள்ளவர்களிடம் உடல்நலம் விசாரித்தார்.''வைரஸ் தொற்று பாதித்தவர்கள் அச்சப்படத் தேவையில்லை. டாக்டர்கள் அறிவுரையை பின்பற்றி மருந்துகளை உட்கொள்ளவேண்டும். கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்,'' என, அமைச்சர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, வினோபாஜி நகரில், வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணியை ஆய்வு செய்தார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X