தமிழ்நாடு

மணல் அள்ளும் இயந்திரங்கள் வீணாகிறது!

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மணல் அள்ளும் இயந்திரங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிவகங்கை மாவட்ட முன்னாள் கலெக்டர் ஜெயகாந்தன் முயற்சியால் ஒன்றியங்களில் விவசாயிகள் நலத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 20 மணல் அள்ளும்இயந்திரங்கள் வாங்கப்பட்டன.இந்த

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மணல் அள்ளும் இயந்திரங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவகங்கை மாவட்ட முன்னாள் கலெக்டர் ஜெயகாந்தன் முயற்சியால் ஒன்றியங்களில் விவசாயிகள் நலத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 20 மணல் அள்ளும்இயந்திரங்கள் வாங்கப்பட்டன.இந்த இயந்திரங்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், ஊரணிகள், நீர் நிலைகளில் நீர் வரத்துக்கு இடையூறாக இருந்த அனைத்து சீமைக்கருவேல மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு துார் வாரும் பணி நடந்தது.

இந்த பணிகளுக்கு தேவையான எரிபொருள், இயந்திரம் இயக்குபவருக்கான சம்பளம் பணி நடக்கும் சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் மூலம் வழங்கப்பட்டது. இதன் காரணமாகபல நுாறு கோடி செலவு செய்து துார் வாரப்பட வேண்டிய வைகை ஆற்றில் 44 கி.மீ., துாரத்திற்கு சில லட்சம் மட்டுமே செலவு செய்து துார் வாரி சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. தற்போது சிறு மழை பெய்தால் போதும் ஆற்றில் நீர் பெருக்கெடுத்துஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.

வரத்துக்கால்வாய்களும் சீரமைக்கப்பட்டதால் நீர் நிலைகள் நிரம்பியது. இதே போல் மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு 32 கி.மீ., பாலாறு, சருகணியாறு, பாம்பாறு,உப்பாறு ஆகிய ஆறுகளின் வழித்தடத்தில் 183 கி.மீ.,வரை சீரமைக்கப்பட்டு முழுமையாக சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.மத்திய, மாநில அரசுகளின் நிதியினை எதிர்பாராமல் மிகவும் குறைந்த செலவில் பெரிய அளவில் விவசாயிகள் பயன் பெறும் வகையில் மணல் அள்ளும் இயந்திரங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டன.

தற்போது அரசு செலவில் வாங்கப்பட்ட மணல் அள்ளும் இயந்திரங்கள் எந்த பணிக்கும் பயன்படுத்தப்படாமல் சிவகங்கை தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மணல் அள்ளும் இயந்திரம் பல மாதங்களாக இயக்கப்படாத நிலையில் வீணாகி வருகிறது.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கூறியதாவது: சிவகங்கையில் மணல் அள்ளும் இயந்திரங்கள் வீணாக நிறுத்தப்பட்டுள்ளன. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக இந்த இயந்திரங்களை பயன்படுத்தி கண்மாய்கள், வரத்துக்கால்வாய்களைதுார் வாரும் பணியினை மேற்கொள்ளலாம்.

மாவட்டத்தில் 40 சதவீத வரத்துக்கால்வாய்கள் புதர் மண்டிய நிலையில் உள்ளது. திருமணிமுத்தாறு பகுதியில் பட்டமங்கலம் முதல் கள்ளிப்பட்டு, எழுவன்கோட்டை வரை ஆற்றின் வரத்துப்பாதை தெரியாமல் சீமைக்கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மணல் அள்ளும் இயந்திரங்களை பயன்படுத்த முன் வர வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X