பொது செய்தி

தமிழ்நாடு

30 சதவீத தொழிலாளர்களுடன் அகழாய்வு பணி தொடக்கம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
திருப்புவனம் : கீழடி, அகரம், கொந்தகை, மணலுார் உள்ளிட்ட நான்கு இடங்களிலும் தமிழக தொல்லியல் துறை சார்பில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து 30 சதவிகித தொழிலாளர்களுடன் பணிகள் தொடங்கியுள்ளன.கீழடியில் ஐந்து குழிகளும், கொந்தகை, அகரத்தில் தலா மூன்று குழிகளும், மணலுாரில் இரண்டு குழிகளும் தோண்டப்பட்டு கல் உழவு கருவி, மூடியுடன் கூடிய பானை, பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகள்

திருப்புவனம் : கீழடி, அகரம், கொந்தகை, மணலுார் உள்ளிட்ட நான்கு இடங்களிலும் தமிழக தொல்லியல் துறை சார்பில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து 30 சதவிகித தொழிலாளர்களுடன் பணிகள் தொடங்கியுள்ளன.

கீழடியில் ஐந்து குழிகளும், கொந்தகை, அகரத்தில் தலா மூன்று குழிகளும், மணலுாரில் இரண்டு குழிகளும் தோண்டப்பட்டு கல் உழவு கருவி, மூடியுடன் கூடிய பானை, பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன. தளர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து நேற்றுமுன் தினம்பணிகள் தொடங்கின, ஒவ்வொரு அகழாய்வு தளங்களிலும் 30 சதவிகித தொழிலாளர்களை கொண்டு பணிகள் நடந்து வருகின்றன.

அரசு முழுமையான தளர்வு அறிவித்தால் தான் அனைத்து தளங்களிலும் பணிகள் முழு வீச்சில் நடைபெறும், ஊரடங்கு காரணமாக குறைந்த தொழிலாளர்களுடன் பணிகள் நடைபெறும் நிலையில் செப்டம்பருடன் நிறைவடைய உள்ள ஏழாம் கட்ட அகழாய்வை நீட்டிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X