பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க அரசு அலுவலர்கள் வலியுறுத்தல்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்திற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், அரசு அலுவலர்கள், மருத்துவ பணியாளர் வசதிக்காக கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்.கொரோனா பரவலை தடுக்க அரசு, தனியார் பஸ்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு அலுவலர்கள், சுகாதாரத்துறை, மருத்துவக்குழுவினர் வசதிக்காக ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை ஆகிய முக்கிய இடங்களில் இருந்து அரசு

ராமநாதபுரம் : ராமநாதபுரத்திற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், அரசு அலுவலர்கள், மருத்துவ பணியாளர் வசதிக்காக கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்.

கொரோனா பரவலை தடுக்க அரசு, தனியார் பஸ்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு அலுவலர்கள், சுகாதாரத்துறை, மருத்துவக்குழுவினர் வசதிக்காக ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை ஆகிய முக்கிய இடங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் மூலம் பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்போது முழுஊரடங்கு தளர்வு காரணமாக 30 சதவீத அரசு அலுவலர்கள் வருகை புரிகின்றனர். இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் சிறப்பு பஸ்களில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது, சிலர் நின்றுகொண்டு பயணம் செய்கின்றனர். இதனால் கொரோனா பரவ வாய்ப்புள்ளது, ஆகையால் கூடுதலாக பஸ்கள் இயக்க போக்குவரத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X