பாம்பன் பாலத்தில் செடிகளால் விரிசல் ஆபத்து

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : பாம்பன் பாலத்தில் வளர்ந்துள்ள மரசெடிகளால், பாலத்தில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது.பாம்பன் கடல் மீது அமைந்துள்ள பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. தற்போது கொரோனாவால் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதித்திருப்பதால் பாம்பன் பாலம் பயணிகள் யாரும் இன்றி வெறிச் சோடிக்கிடக்கிறது.இந்நிலையில் பாலத்தின் நடைபாதையில் பல இடங்களில்

ராமேஸ்வரம் : பாம்பன் பாலத்தில் வளர்ந்துள்ள மரசெடிகளால், பாலத்தில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது.

பாம்பன் கடல் மீது அமைந்துள்ள பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. தற்போது கொரோனாவால் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதித்திருப்பதால் பாம்பன் பாலம் பயணிகள் யாரும் இன்றி வெறிச் சோடிக்கிடக்கிறது.

இந்நிலையில் பாலத்தின் நடைபாதையில் பல இடங்களில் மரசெடிகள் வளர்ந்துள்ளது. இச்செடிகளை அகற்றாவிடில் நடைபாதை, தடுப்பு சுவரில் வேர் வளர்ந்து விரிசல் ஏற்பட்டு, பாலம் பலவீனமாகும் அபாயம் உள்ளது. ஊரடங்கு தளர்வுக்கு பின் பாலத்தில் நின்று கடல் அழகை வேடிக்கை பார்க்கும் சுற்றுலா பயணிகளுக்கு விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் செடிகளை அகற்றி பாலத்தின் உறுதி தன்மையை பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X