பொது செய்தி

தமிழ்நாடு

கிர்ணி பழம் விலை குறைவு; கிலோ ரூ.20க்கு விற்பனை

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
பட்டணம்காத்தான் : ராமநாதபுரம் பகுதிக்கு திருச்சியிலிருந்து கிர்ணி பழம் விற்பனைக்கு வந்துள்ளன. இதன் விலை குறைந்துள்ளதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கினர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகக்குறைந்த அளவில் காய்கறி, பழங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. கொய்யா, மாதுளை, தர்பூசணி, திராட்சை, கிர்ணிபழம் உள்ளிட்ட பெரும்பாலான பழங்கள் மதுரை, திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களிலிருந்து

பட்டணம்காத்தான் : ராமநாதபுரம் பகுதிக்கு திருச்சியிலிருந்து கிர்ணி பழம் விற்பனைக்கு வந்துள்ளன. இதன் விலை குறைந்துள்ளதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகக்குறைந்த அளவில் காய்கறி, பழங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. கொய்யா, மாதுளை, தர்பூசணி, திராட்சை, கிர்ணிபழம் உள்ளிட்ட பெரும்பாலான பழங்கள் மதுரை, திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களிலிருந்து வாங்கி வந்து ராமநாதபுரம், பட்டணம்காத்தான், சூரன்கோட்டை, சக்கரக்கோட்டை பகுதிகளில் வாகனங்களில் வைத்து விற்கின்றனர்.

தற்போது சீசனை முன்னிட்டு முலாம் பழம் எனப்படும் கிர்ணிபழங்கள் திருச்சியிலிருந்து வந்துள்ளன. இப்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்து உள்ளது. கிலோ ரூ.20க்கு விற்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்குவதாக வியாபாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X