பொது செய்தி

தமிழ்நாடு

உரப்புளியில் மரங்கள் சரணாலயம்; அரிய வகை மரக்கன்றுகள் நடவு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமையை மேம்படுத்தும் நோக்கில், பரமக்குடி அருகே உரப்புளியில் மரங்கள் சரணாலயம் உருவாக்கப்பட்டுஉள்ளது.இங்கு 20 ஆயிரம் மரங்கள் பராமரிக்கப்படுகிறது. நேற்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அரிய வகை மரக்கன்றுகளை கண்டறிந்து அதனை நடும் பணியில் ஈடுபட்டார்.மஞ்சள் கடம்பு, மலை அரளி, நறு உளி, பதிமுகம், கள்ளி, வெண் மந்தாரை, ருத்ராட்சம்,

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமையை மேம்படுத்தும் நோக்கில், பரமக்குடி அருகே உரப்புளியில் மரங்கள் சரணாலயம் உருவாக்கப்பட்டுஉள்ளது.

இங்கு 20 ஆயிரம் மரங்கள் பராமரிக்கப்படுகிறது. நேற்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அரிய வகை மரக்கன்றுகளை கண்டறிந்து அதனை நடும் பணியில் ஈடுபட்டார்.மஞ்சள் கடம்பு, மலை அரளி, நறு உளி, பதிமுகம், கள்ளி, வெண் மந்தாரை, ருத்ராட்சம், பூமருது, நீர்மருது, மகிழம்பூ, புன்னை, பன்னீர், குமிழ், கருவாகை என 133 திருக்குறள் அதிகாரங்களை எடுத்துக் கூறும் வகையில், 133 மரக்கன்றுகள் நடப்பட்டன.

கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார், எஸ்.பி., கார்த்திக், சப் கலெக்டர் சுகபுத்ரா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன், வன அலுவலர் அருண்குமார், வன உயிரின பாதுகாவலர் மாரிமுத்து, பரமக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் சிந்தாமணி, துணைத்தலைவர் ராஜேந்திரன், உரப்புளி ஊராட்சி தலைவர் நாகலட்சுமி, துணைத் தலைவர் மல்லிகா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X