பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 5594 டன் கூடுதல் அரிசி

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : மாவட்டத்தில் அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும் ஒரு நபருக்கு 5கிலோ வீதம் கூடுதலாக அரிசி வழங்க மொத்தம் 5594 டன் அரிசி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜூன்15க்கு மேல் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்புவழங்கப்பட உள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மாதம் வரை புதிதாக வந்துள்ள 3710 கார்டுகளுடன் சேர்த்து மொத்தம் 3,78,448 அரிசிகார்டுகள் உள்ளன. இவர்களுக்கு

ராமநாதபுரம் : மாவட்டத்தில் அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும் ஒரு நபருக்கு 5கிலோ வீதம் கூடுதலாக அரிசி வழங்க மொத்தம் 5594 டன் அரிசி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜூன்15க்கு மேல் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்புவழங்கப்பட உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மாதம் வரை புதிதாக வந்துள்ள 3710 கார்டுகளுடன் சேர்த்து மொத்தம் 3,78,448 அரிசிகார்டுகள் உள்ளன. இவர்களுக்கு முதல் கட்ட கொரோனா நிவாரண நிதி ரூ.2000 கடந்த மாதம் வழங்கப்பட்டுள்ளது.வாங்காத1276 கார்டு தாரர்கள் பெற்றுக் கொள்ளலாம். தற்போது அரிசி கார்டுதாரர்களுக்கு குடும்ப நபர்களின் எண்ணிக்கை ஏற்றவாறு தலா 15கிலோ முதல் 20 கிலோ வரை அரிசி வழங்கப்படுகிறது.

இத்துடன் மத்திய அரசு உத்தரவுப்படி குடும்பத்தில் உள்ளஒரு நபருக்கு தலா 5 கிலோ வீதம் விலையில்லாமல் கூடுதலாக வழங்கப்படுகிறது.வழக்கமான 5740 டன்னுடன், தற்போது கூடுதலாக 5594 டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் அரிசி வழங்கும் விபரம் ரேஷன் கடைகளில் விளம்பரப்படுத்தப்பட உள்ளது.--------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X