ரூ.2,000 நிவாரணம் வாங்காத 2.58 லட்சம் கார்டுதாரர்கள்!

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (23) | |
Advertisement
சென்னை : முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், கொரோனா நிவாரணமாக, 2.09 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 4,000 ரூபாய் வழங்க, மே 7ல் உத்தரவிட்டார்.அதில், முதல் தவணையான, தலா, 2,000 ரூபாய் வழங்கும் பணி, ரேஷன் கடைகளில், அம்மாதம் 15ம் தேதி துவங்கியது. மே 31 வரை, 2.06 கோடி கார்டுதாரர்கள் நிவாரண தொகையை வாங்கிய நிலையில், 3.35 லட்சம் பேர் வாங்கவில்லை. முழு ஊரடங்கால் சொந்த ஊர் சென்றது உள்ளிட்ட காரணங்களால்
Covid19, monetary relief, Rs 2000, Corona

சென்னை : முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், கொரோனா நிவாரணமாக, 2.09 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 4,000 ரூபாய் வழங்க, மே 7ல் உத்தரவிட்டார்.

அதில், முதல் தவணையான, தலா, 2,000 ரூபாய் வழங்கும் பணி, ரேஷன் கடைகளில், அம்மாதம் 15ம் தேதி துவங்கியது. மே 31 வரை, 2.06 கோடி கார்டுதாரர்கள் நிவாரண தொகையை வாங்கிய நிலையில், 3.35 லட்சம் பேர் வாங்கவில்லை. முழு ஊரடங்கால் சொந்த ஊர் சென்றது உள்ளிட்ட காரணங்களால் சிலர் நிவாரண தொகை வாங்கவில்லை என்ற தகவல், அரசின் கவனத்திற்கு சென்றது.நிவாரணம் வாங்காதவர்கள், இம்மாதம் வாங்கிக் கொள்ளலாம் என, அரசு அவகாசம் வழங்கியது.


latest tamil newsநேற்று வரை, 2.07 கோடி கார்டுதாரர்கள் நிவாரண தொகை வாங்கி உள்ளனர். இது, மொத்த கார்டுதாரர்களில், 98.77 சதவீதம். இன்னும், 2.58 லட்சம் கார்டுதாரர்கள் மட்டும் நிவாரணம் வாங்காமல் உள்ளனர். நிவாரண தொகை வழங்க, 4,196 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், 4,140 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நிவாரண தொகையை வாங்காதவர்கள், அரசின் இலவச திட்டங்களை விரும்பாதவர்கள் என கூறப்படுகிறது.

அத்தகையோர், நிவாரண தொகையை அரசுக்கு விட்டு கொடுப்பதற்கான வசதியை, பொது வினியோக திட்ட இணையதளத்தில் ஏற்படுத்தினால், கார்டுதாரர்கள் அதிகாரப்பூர்வமாக அரசுக்கு விட்டு கொடுக்க வாய்ப்புள்ளது.இல்லையேல், கார்டுதாரர்கள் வாங்காத பணத்தை, ரேஷன் ஊழியர்கள் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-ஜூன்-202116:04:46 IST Report Abuse
Pugazh V . நிவாரணப் பணம் வாங்காத மானஸ்தர்களுக்கு (??) நன்றி. கொஞ்ச நாள் முன்பு, "எங்கே நிவாரணம்? திமுக வாக்குறுதியை நடைமுறைப் படுத்தவில்லை" என்று எழுதியவர்கள் எங்கே?? வாங்கப்படாத பணம் எந்த நிதியின் கீழ் விநியோகிக்கப்பட்டதோ அதே நிதியில் சென்று சேர்ந்து விடும். என்ன சார் இதுகூடத் தெரியாதா? The unspent fund would remain and or return to the same corpus from which it was distributed. என்பது தான் இந்திய ஆட்சி அமைப்பு விதி.
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
10-ஜூன்-202114:08:58 IST Report Abuse
Anantharaman Srinivasan கார்டுதாரர்கள் வாங்காத இலவச பணத்தை, ரேஷன் ஊழியர்கள் ஆளும்கட்சி மாவட்டங்களுடன் சேர்ந்து முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
10-ஜூன்-202113:01:20 IST Report Abuse
Ramesh Sargam வாங்காத பணம் எங்கு போகிறது? யாரிடம் இருக்கிறது? அரசு கஜானாவிற்கு மீண்டும் செல்கிறதா? இல்லை, ஊழியர்களில் சிலர், போகஸ் கார்டு, வாங்காதவர்கள் பெயரில் தயார் செய்து பணத்தை ஆட்டை போட்டு விடுகிறார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X