பொது செய்தி

தமிழ்நாடு

பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போலீஸ் வாகனம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மின்னணு வீடியோ வாகனத்தை போலீசார் தயார்படுத்தி வருகின்றனர்.திண்டுக்கல் கிராமங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமணம் அதிகம் நடக்கின்றன. ஊரடங்கிற்கு முன் மாதம் 10 பேர் போக்சோ வழக்கில் கைதாகினர். தற்போது குழந்தை திருமணங்கள் அதிகம்.போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம். எனவே,

திண்டுக்கல் : பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மின்னணு வீடியோ வாகனத்தை போலீசார் தயார்படுத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் கிராமங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமணம் அதிகம் நடக்கின்றன. ஊரடங்கிற்கு முன் மாதம் 10 பேர் போக்சோ வழக்கில் கைதாகினர். தற்போது குழந்தை திருமணங்கள் அதிகம்.போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம். எனவே, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசார் முடிவெடுத்துள்ளனர்.

புதிய டி.ஐ.ஜி., விஜயகுமாரியின் அறிவுரையின் பேரில் எஸ்.பி., ரவளிப்பிரியா மின்னணு வாகனம் மூலம் வீடியோ வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார். அந்த வாகனம் தயார் செய்யும் பணி நடக்கிறது. இதில் குறும்படங்கள், விழிப்புணர்வு வாசகம் மற்றும் வீடியோக்கள், காவலன் செயலி விவரம், போலீஸ் அவசர எண்கள் இருக்கும். விரைவில் மாவட்டத்தின் எல்ல பகுதிகளுக்கும் சென்று வரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X