பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
வாகனங்கள் ஒப்படைப்புவத்தலக்குண்டு: நிலக்கோட்டை போலீஸ் உட்கோட்டத்தில் ஊரடங்கின் போது இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்க மாவட்ட எஸ்.பி., ரவளிபிரியா உத்தரவிட்டிருந்தார். அதன்படி அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் கைப்பற்றிய வாகனங்களின் உரிமையாளரை வரவழைத்து எச்சரித்து கிருமி நாசினி தெளித்து

வாகனங்கள் ஒப்படைப்பு

வத்தலக்குண்டு: நிலக்கோட்டை போலீஸ் உட்கோட்டத்தில் ஊரடங்கின் போது இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்க மாவட்ட எஸ்.பி., ரவளிபிரியா உத்தரவிட்டிருந்தார். அதன்படி அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் கைப்பற்றிய வாகனங்களின் உரிமையாளரை வரவழைத்து எச்சரித்து கிருமி நாசினி தெளித்து திருப்பி வழங்கினர்.

பூக்கள் விலை உயர்வு

நிலக்கோட்டை: ஊரடங்கால் பூக்களின் விலை வெகுவாக குறைந்தது. அதேசமயம் நிலக்கோட்டைப் பகுதியில் 3 நாட்களாக மழை பெய்ததால் மல்லிகை செடிகளில் மொட்டுக்கள் குறைந்து மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்தது. இதனால் மல்லிகை கிலோ ரூ.300 முல்லை 150, கனகாம்பரம் 250, செண்டுபூ, ரோஜா, சம்பங்கி, அரளி ரூ. 100க்கு குறைவாக விற்றன. தளர்வால் பூக்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரயிலில் மது;ஒருவர் கைது

திண்டுக்கல்: மைசூரில் இருந்து துாத்துக்குடி செல்லும் ரயிலில் மதுபாட்டில்களை கடத்தி வருவதாக திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரயில் நேற்று காலை திண்டுக்கல் வந்ததும் போலீசார் சோதனையிட்டனர். மதுரை ஒத்தக்கடை மீனாட்சி சுந்தரம் 44, மதுபாட்டில்களை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. மீனாட்சி சுந்தரத்தை கைது செய்து, 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ஆதரவற்றோருக்கு நிவாரணம்

வேடசந்துார்: காவல் துறையினர் சார்பில் தட்டாரப்பட்டி, மல்வார்பட்டி, ஸ்ரீராமபுரம் ஊராட்சி பகுதியில் உள்ள ஊனமுற்றோர், முதியோர், ஆதரவற்றோருக்கு, அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக, வேடசந்துார் டி.எஸ்.பி., மகேஷ், இன்ஸ்பெக்டர் கவிதா வழங்கினர். ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

தன்னார்வலர்கள் வலியுறுத்தல்

திண்டுக்கல்: தமிழ்நாடு அலையன்ஸ் திண்டுக்கல் அமைப்பாளர் அலோசியஸ் தெரிவித்தது: கொரோனா காலத்தில் மக்களுக்கும் அரசிற்கும் இடையில் பாலமாக தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. சுகாதாரத்துறையுடன் இணைந்து விழிப்புணர்வு, மருத்துவ முகாம் நடத்துவது என களப்பணியாற்றுகிறோம். தொற்று பாதித்து பல தன்னார்வலர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.

மருத்துவ முகாம்

வேடசந்துார்: பேரூராட்சியின் 15 வார்டுகளிலும் மருத்துவமுகாம் நடந்து வருகிறது. கொரோனா பாதிப்பை முன்னிட்டு நடைபெறும் இம்முகாமில் காய்ச்சல், சளி, கை கால் வலி பாதிப்புகள் உண்டா என பரிசோதிக்கின்றனர். சிகிச்சை உட்பட மருத்துவ உதவி தேவைப்படுவோரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக, செயல் அலுவலர் முகமது யூசுப் தெரிவித்தார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X